Followers

Wednesday, June 11, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே !
                    இன்று காலை பேசிய பெங்களுரை சேர்ந்த நண்பர் இளங்கோவன் என்பவர் என்னிடம் நாம் ஆன்மீகத்தைப்பற்றி நிறைய விசயங்களை வெளியில் சொன்னாலும் அதனை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்கிறார்கள் என்று சொன்னார்.

பொதுவாக இந்தியர்களிடம் ஆன்மீகத்தைப்பற்றி சொல்ல வேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன். இந்தியர்களுக்கு இதுவரை தன்னிறைவு அடையவில்லை. பொருளாதாரத்தில் இதுவரை தன்னிறைவு பெறவில்லை. அவர்களுக்கு பொருளாதாரத்தை தரும் விசயங்களை மட்டும் சொல்லுங்கள் என்று சொல்லிருந்தேன்.

ஒருவர் பொருளாதாரத்தில் நன்றாக இருந்த பிறகு மனது அடுத்ததாக ஆன்மீகத்தை தேடநினைக்கும். பொருளாதாரம் திருப்தி அடையாதவரை ஆன்மீகம் பக்கம் நாட்டம் செல்லாது. இவர்களிடம் ஆன்மீகத்தை சொல்லி என்ன நடந்துவிடபோகின்றது.

இந்தியர்களி்டம் ஒரு கெட்ட குணம் இருக்கும். எதனை பார்த்தாலும் அதை சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கும் குணம் தான். கடவுளையே சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கும் மனநிலை இருக்கும். இராமர் கடவுள் அவதாரம் என்று சொல்லியும் மக்கள் என்ன நினைத்தார்கள். அவரின் மனைவி கற்போடு இருக்கிறாளா என்று சந்தேகப்பட்டவன் தானே இந்தியன். இவனிடம் ஆன்மீகத்தைப்பற்றி பேசுவதற்க்கு பதில் எந்தந்த கோவிலில் அன்னதானம் போடுவார்கள் என்று சொல்லுங்கள் அதனை கேட்டுக்கொள்வான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: