Followers

Friday, June 6, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய நாளில் எனக்கு வாடிக்கையாளர்கள் நிறை பேர் இருந்தாலும் ஒரு சில நாட்கள் நான் வேற வேலை பார்க்க சென்றுவிடுவேன். அது என்ன மாதிரி வேலையாக இருந்தாலும் சென்றுவிடுவது உண்டு. குருவின் போதனைகளில் உழைப்பும் முதல் இடம் வகிக்கின்றது. உழைத்து சாப்பிடவேண்டும் என்று சொல்லுவார்.

நான் செல்லும் வேலையும் அதிகமாக இருக்காது. குறைந்த மணி நேரம் வேலை பார்த்துவிட்டு வருவது போல் வேலை இருக்கும். எனக்கு தெரிந்த நண்பர்கள் நிறைய பேர் தனியாக ஆர்டர் எடுத்து வேலை செய்வார்கள் அவர்களுக்கு உதவியாகவும் அதே நேரத்தில் ஒரு ஆள் போலவும் வேலைக்கு சென்றுவிடுவேன். 

நேற்றுகூட மாலை நேரத்தில் ஒரு திருமண வரவேற்புக்கு கேட்டரிங் வேலையை எனது நண்பர் ஒருவர் எடுத்து இருந்தார். நேற்று மாலை அந்த வேலையை செய்தேன்.  மூன்று மணி நேரம் மட்டும் அந்த வேலை இருந்தது. நான் எல்லா வேலையும் செய்து இருக்கிறேன். விவசாய குடும்பத்தில் பிறந்தால் அவனுக்கு நன்றாக எல்லா வேலையும் தெரியும். 

சென்னையில் சின்ன சின்ன வேலையாக பல வேலைகள் வைத்திருக்கிறேன் அவ்வப்பொழுது அதனை செய்வேன். நாம் பிறரை ஏமாற்றகூடாது திருடகூடாது அதனை தவிர எந்த வேலையும் செய்யலாம். 

நாம் என்னவாக இருந்தாலும் மக்களோடு மக்களாக இருக்கவேண்டும். ஒவ்வொரு வேலை செய்யும்பொழுது அந்தந்த வேலையில் உள்ளவர்கள் நம்மை திட்டதான் செய்வார்கள். சிறிய தவறு நடக்கும் அப்பொழுது திட்டுவார்கள். நாம் அந்த இடத்தில் பெரிய ஆள் என்று காட்டமுடியாது. இதனை எல்லாம் நாம் செய்தால் அப்பொழுது தான் நமக்கு ஆணவம் என்பது வராது. தலைக்கனம் இருக்காது. 

இதனை எழுதுவது பெருமைக்காக இல்லை. எல்லா நிலையிலும் நாம் இருந்தாலும் நாம் ஆன்மீகத்தில் இருக்கமுடியும் என்பதை காட்டுவதற்க்கு மற்றும் என்ன தான் கோடிக்கோடியாக பணம் வந்தாலும் உழைக்கவேண்டும் என்ற கொள்கையை வகுத்து கொடுத்த குருவிற்க்கு நன்றி சொல்லவேண்டும் என்பதற்க்காக இதனை எழுதுகிறேன்.

இன்றைக்கும் நான் சாப்பிடும் சாப்பாடு எனது வியர்வையை சிந்தி சம்பாதித்த பணத்தில் இருந்து தான் சாப்பிடுவேன். அப்புறம் நீங்கள் கொடுக்கிற பணத்தை வைத்து சாப்பிட்டால் எனக்கு இரண்டு நாளில் ஆப்ரேஷன் செய்யவேண்டியவரும் கொஞ்ச பாவமா செய்கிறீர்கள்.

நம்பினால் நம்புங்கள்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.