Followers

Sunday, June 1, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். அவரின் கேள்வி ஜாதககதம்பம் வழியாக நாங்கள் நிறைய விசயங்களை தெரிந்துக்கொள்கிறேன் நிறைய தகவல்களை தருகிறீர்கள் அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அப்படி இருந்தும் முதல் மதிப்பு பணத்திற்க்கு கொடுக்கிறீர்கள் அது எதற்க்கு என்று தெரிந்துக்கொள்ளலாமா

பரவாயில்லை கண்டிபிடித்துவிட்டீர்களே. ஒவ்வொரு மனிதனக்கும் ஒரு வீக் இருக்கும் எனது வீக் பணம். எனக்கு பணம் என்றால் மிகவும் பிடித்த ஒன்று. அதனால் நான் பணத்தின் மீது அதிக ஈடுபாடு காட்டுகிறேன். 

பணத்தின் மீது அதிக ஈடுபாடு காட்டுவதற்க்கு ஜாதக கதம்பத்தின் வழியாக வந்த நண்பர்கள் கூட இருக்கலாம். ஒரு சில நண்பர்கள் இது எல்லாம் வாழ்க்கை கிடையாது. பணத்தை சம்பாதித்து காட்டு என்று கேட்டார்கள். அதனையும் சம்பாதித்து காட்டுவோம் என்று செய்துக்கொண்டிருக்கிறேன். 

பொதுவாக நான் பணத்தை என்னிடம் வரும் சோதிடஅன்பர்களிடம் பரிகாரம் என்ற பேரில் கறப்பது கிடையாது. தொழில் செய்பவர்களுக்கு உதவி செய்து அதன் வழியாக சம்பாதிக்கிறேன். சம்பாதித்து கொடுத்து சம்பாதிக்கிறேன். 

நான் சென்டிமெண்டிற்க்கு மயங்குபவன் கிடையாது. பணம் கொடுத்தால் செய்வேன் என்று சொல்லுபவன். பணத்திற்க்கு அடிமை கிடையாது. எனக்கு பணம் அடிமை என்று வைத்திருக்கிறேன். ஒரு உண்மையான நடந்த சம்பவத்தை சொல்லுகிறேன். என்னிடம் வந்து ஒரு பெரிய பணக்காரர் சொன்னார் நான் உங்களுக்கு நூறு கோடி ரூபாய் தருகிறேன் எனக்கு மட்டும் செய்யுங்கள் என்றார். நான் சொல்லுவதை மட்டும் செய்தால் போதும் என்றார். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். காரணம் அவருக்கு நான் அடிமைப்போல் இருக்கவேண்டும் என்று நினைத்தார்.

நான் யாருக்கும் அடிமைப்போல் இருக்கமாட்டேன். நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். பணத்தை தேடி ஒடுவதில்லை பணத்தை வரவழைக்கிறேன். யாரையும் ஏமாற்றி பணம் வாங்குவதில்லை. நான் பணத்தை அவர்களுக்கு கொடு்க்க வழி செய்கிறேன் அவர்கள் பணம் கொடுக்கிறார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: