வணக்கம் நண்பர்களே!
மின்னல் வேகத்தில் ஒரு கேள்வி வந்தது. கர்மா என்று அடுத்தவர்கள் செய்யும் தவறை பார்த்துக்கொண்டு இருந்துவிடமுடியுமா என்று ஒரு நண்பர் கேட்டார்.
தவறை நாம் தட்டிகேட்டுக்கொண்டிருந்தால் நமது வாழ்வை நாம் வாழ தெரியாமல் போய்விடுவோம். தவறுகளை தட்டிக்கேட்க தான் அரசாங்கம் என்ற ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். அடுத்தவர்களின் குறையை நாம் பார்த்துக்கொண்டிருந்தால் நமது குறை நமது கண்ணிற்க்கு தெரியாமல் போய்விடும்.
இத்தனை நாட்கள் ஜாதககதம்பத்தை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் அதில் வரும் விசயங்கள் உங்களுக்கு பிடிக்கிறது என்பதால் படிக்கிறீர்கள் இதனை நான் பெறுவதற்க்கு பல ஆன்மீகவாதிகளை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் நல்லவரா அல்லது கெட்டவரா என்று பார்த்துக்கொண்டிருந்தால் என்னால் இன்று இதனை எழுதமுடியாது.
ரோஜாவை பறிக்கவேண்டும் என்றால் ரோஜா செடியில் முள் இருக்கதான் செய்யும். முள் இல்லாமல் ரோஜா மட்டும் உள்ள செடியை பார்த்து தான் நான் பறிப்பேன் என்றால் தேடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். முள் நம்மை குத்தாமல் இருந்தால் சரி என்று ரோஜாவை பறித்துக்கொண்டு வந்துவிட்டால் நமக்கு மாலை தயாராகிவிடும்.
அடுத்தவனை எல்லாம் நாம் கவனிக்க நாம் பிறக்கவில்லை. பொதுவாக உங்களிடம் சொல்லுகிறேன். தவறு என்பது எல்லாம் நான்கு பேர் சேர்ந்து ஒரு சட்டத்தை எழுதி வைத்திருக்கின்றனர். அந்த சட்டத்தை படித்துவிட்டு இது தவறு என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஒரு சட்டம் சொல்லும் தவறு என்பது உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் எப்படி சரியாக வரும். ஒவ்வொரு நாட்டிற்க்கும் ஏன் ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் ஒரு சட்டம் இருக்கிறது. நான்கு மனிதர்கள் சேர்ந்து உருவாக்கியது நாலுகோடி மனிதர்களுக்கு எப்படி சரிபட்டுவரும். அதனை எல்லாம் நீங்கள் விட்டுவிட்டு உங்களுக்கு தேவையான ரோஜாவை மட்டும் பறிக்கபாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment