வணக்கம் நண்பர்களே!
இறப்பை பற்றி கவலைப்படுவதில்லை என்று சொன்னேன் அல்லவா. அதனைப்பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு சிறிய வயதில் இறப்பை பற்றி மிகுந்த பயம் இருந்தது. அந்த காரணத்தால் தான் நான் ஆன்மீகத்தை நாடினேன்.
ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பயிற்சி செய்ய செய்ய எனக்கு இறப்பு என்பது ஒரு சந்தோஷமான ஒரு நிகழ்வாகவே தென்படுகிறது. ஒவ்வொரு ஆன்மீகவாதியும் இறப்பை கண்டு வந்தால் தான் அவன் ஆன்மீகவத்தில் சிறந்து விளங்குவான்.
புத்தர் இறப்பை கண்டு தான் ஆன்மீகத்திற்க்கு வந்தார். இறப்பைப்பற்றி அதிகம் சிந்தித்தவர் புத்தர் மட்டுமே என்று கூட சொல்லுவார்கள்.ஒரு இறப்பை நேரில் பார்த்தப்பொழுது மட்டுமே அவர் ஆன்மீகத்திற்க்கு வர எண்ணினார் என்று கூட சொல்லுவார்கள்.
இறப்பைப்பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் உங்களுக்குள் ஆன்மீகம் வளர ஆரம்பிக்கும். அந்த ஆன்மீகம் உங்களின் வாழ்க்கையை அப்படியே மாற்றிவிடும் தன்மையில் வளரும். நீங்களும் இறப்பைப்பற்றி சிந்தித்து ஆன்மீகத்திற்க்கு வர முயற்சி செய்யுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
3 comments:
சாகிற நாள் தெரிந்தால்
வாழுகிற நாட்கள் நரகமாகிவிடுமே..!
;) படித்தேன். ரஸித்தேன்.
;) படித்தேன். ரஸித்தேன். யோசிக்க வைத்தது. மிக்க நன்றி.
Post a Comment