வணக்கம் நண்பர்களே!
இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. குழந்தைக்காக மருத்துவமனையை ஏறி இறங்குகின்றனர். பொதுவாக இளம் தலையினர்க்கு குழந்தை இல்லாதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும் தூக்க்ம் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கின்றது.
இளைஞர்கள் வேலை வேலை என்று உழைப்பதால் அவர்களுக்கு அதிகமான டென்ஷன் ஏற்படுகிறது. இதனாலே பல பேர்க்கு தூக்கம் வருவதில்லை. ஒரு மனிதனுக்கு குறைந்தது பத்து மணி நேரத்திற்க்கு மேல் வேலையை பார்க்க வைத்தால் அவனின் உடலில் என்ன இயந்திரமா பொருத்தி இருக்கின்றது.
தூக்கத்தை இழந்தவுடன் உடல் உறுப்புகள் வேறு மாதிரி வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது.குழந்தைகள் உருவாவதும் தள்ளிபோய்விடுகிறது அல்லது குழந்தைகள் இல்லாமல் போய்விடுகிறது.
விரைய வீட்டில் நிற்க்கும் கிரகங்கள் அல்லது அந்த வீட்டு அதிபதி தன் பலத்தை அதிகப்படுத்தும்பொழுது இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்படுகிறது. விரைய வீடான இந்த வீட்டை பார்க்கும் கிரகங்களும் இப்படிப்பட்ட பிரச்சினையை உருவாக்கும்.
இந்த வீட்டில் அமரும் கிரகங்கள் ஒருவருக்கு தூக்கத்தை அதிகளவு கெடுக்கும் தன்மை உடையது. ஒருவருக்கு கேது இந்த வீட்டில் இருந்தால் அவர்களுக்கு அதிகமான தூக்கத்தை இழக்கவைப்பார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment