Followers

Monday, June 9, 2014

உடலும் ஆன்மீகமும்


வணக்கம் நண்பர்களே!
                    சென்னையில் நல்ல மழை. எவ்வளவு குளிரையும் தாங்கிவிடலாம் ஆனால் வெயிலை என்னால் தாங்கமுடியாது.  வெயிலால் ஒரு நல்ல விசயம் நடந்தது என்றால் நான் வெளியில் செல்வதே கிடையாது. மாலை நேரங்களில் மட்டும் வெளியில் செல்வேன். தனியாக இருந்த காரணத்தால் பல நல்ல விசயங்களை எடுத்தேன் அதனால் இன்று ஷேர் மார்க்கெட்டிங் செய்பவர்களுக்கு நல்லது நடைபெறுகிறது. 


யோகா தியானம் எல்லாம் செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். எத்தனை பேர் இதனை ஆரம்பித்து இருப்பீர்கள் என்று தெரியவில்லை ஆரம்பிக்காதவர்கள் உடனே ஆரம்பித்து விடுவது நல்லது. ஆத்மா குடிக்கொண்டிருக்கும் உடலை நன்றாக பாதுகாத்துக்கொள்ளவேண்டும். உடலில் தேவையற்ற விசயங்கள் இருந்தால் அது உங்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு எதிராக அமைந்துவிடும். 

உணவைபற்றி நான் நிறைய சொல்லிருக்கிறேன். எந்த உணவை நீங்கள் சாப்பிட்டாலும் தினமும் நன்றாக உடற்பயிற்சி செய்யவேண்டும். ஒரு சிலர் ஞாயிற்றுகிழமை மட்டும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று சொல்லுகிறார்கள். தினமும் உடலுக்கு உணவு தேவைப்படுவது போல் தினமும் உடலுக்கு உடற்பயிற்சி செய்யவேண்டும். 

பேரிச்சம்பழம் பிஸ்தா பாதாம் இப்படி சாமியார்கள் சாப்பிடும் ஐட்டத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். இது எல்லாம் காமத்தை அதிகமாக தூண்டும் பொருளாக இருந்தாலும் இது இல்லாமல் சாமியார்கள் கிடையாது. எந்தளவுக்கு உங்களின் உடலில் காமம் இருக்கின்றதோ அந்தளவுக்கு நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையலாம். காமத்தை ஆன்மீகசக்தியாக மாற்ற கற்றுக்கொள்ளவேண்டும்.

யோகா செய்வதற்க்கு நமக்கு உடலும் நல்ல வலுவாக இருக்கவேண்டும். அதற்கு தான் இப்படிப்பட்ட உணவு பொருட்களை அதிகமாக சாப்பிடச்சொல்லுகிறேன். உணவைப்பற்றி அதிகம் சொல்லதேவையில்லை உங்களுக்கே தெரியும்.

யோகா மற்றும் தியானம் செய்வது மட்டும் உங்களை உயர்த்திவிடாது. ஏதாவது ஒரு மந்திரப்பயிற்சியும் செய்யவேண்டும். பிரபஞ்சசக்தி சேரும்பொழுதே நீங்கள் சக்தி உடையவர்களாக மாறுவீர்கள்.

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் எளிதாக கிடைக்கிறது. ஆன்மீகம் சார்ந்த விசயங்கள் நிறைய கிடைக்கின்றன. அதனை எல்லாம் நீங்கள் வீட்டில் இருந்தே படித்து தெரிந்துக்கொண்டு அதனை நீங்கள் பின்பற்றி வரலாம். தேவைப்பட்டால் உங்கள் ஊரில் உள்ள ஆன்மீக பெரியவர்களிடம் இதனை கற்றுக்கொள்ளுங்கள்.

எப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தாலும் நீங்கள் தினமும் அதனை பின்பற்றி செய்யும்பொழுது மட்டுமே அதில் என்ன இருக்கின்றது என்பது தெரியவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



No comments: