Followers

Sunday, June 1, 2014

கர்மாவில் தலையீடு செய்யாதீர்கள்


வணக்கம் நண்பர்களே!
                    தன்னுடைய வேலையை பார்த்தைவிட அடுத்தவன் என்ன செய்கிறான் என்பதை பார்ப்பதில் அதிக கவனத்தை மனிதர்கள் செலுத்துகின்றனர். தன்னை பார்க்க தெரிந்தவனுக்கு மட்டுமே ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு இருக்கும்.

ஒரு மனிதன் வாழ்நாளில் தன்னை பார்ப்பதற்க்கே அவனுக்கு நேரம் இருக்காது ஆனால் அனைவரும் அடுத்தவர்களை பார்ப்பதற்க்கே அதிக நேரம் செலவு செய்கின்றனர். ஒருவன் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தால் உலகத்தை கவனித்துக்கொண்டிருக்கலாம். மாதம் மாதம் சம்பளம் வாங்குகிறவன் அடுத்தவனேயே கவனித்துக்கொண்டிருந்தால் அவனின் வாழ்க்கை வீண் என்று சொல்லவேண்டும்.

உங்களை பாருங்கள் ஏன் இந்த உலகம் இப்படி இருக்கின்றது என்பதை எல்லாம் பார்த்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அடுத்தவர்கள் எப்படி இருந்தாலும் அவனை ஏற்றுக்கொண்டு அவனின் வேலையை அவன் பார்க்கிறான் என்று நீங்கள் இருந்துவிட்டால் உங்களை கவனிக்க தொடங்கிவிடுவீர்கள்.

ஒரு சாமியார் ஒரு தவறை செய்தவுடன் அனைத்து மக்களும் அவனையே அவதூறாக பேசினார்கள். ஒரு மனிதனின் தனிப்பட்ட விசயத்தில் எதற்கு நாம் தலையீடுகிறோம் என்று ஒருவர் கூட நினைக்கவில்லை. அவர் செய்தது நியாயம் என்று நான் சொல்லவதற்க்கு இதனை சொல்லவில்லை. நமது மனதின் நிலை என்ன என்று பார்ப்பதற்க்காக அந்த விசயத்தை சொல்லுகிறேன். இதில் பிற சாமியார்களும் அவரை தவறாக பேசினார்கள். இவன் வேலை விட்டுவிட்டு அவன் செய்துக்கொண்டிருக்கிறான் என்பதேயே கவனித்துக்கொண்டிருக்கிறான். இதனை விட உண்மை சொல்லபோனால் அவன் ஜாலியாக இருந்திருக்கிறான் நமக்கு கிடைக்கவில்லையே என்ற தாபம் தான் இதில் தெரிகிறது.

மனிதன் என்றாலே தவறு செய்வான் என்பது இயல்பு என்னிடம் பேசும் நண்பர்கள் எப்படி இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன் அதற்கு காரணம் ஒவ்வொரு மனிதனும் இப்படி தான் இருப்பான். அவனை அவனாகவே ஏற்றுக்கொள்வோம். நமது தனிப்பட்ட விருப்பத்தை அவன் மேல் ஏன் திணிப்பானோ என்று இருந்துவிடுவேன்.

ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறான் என்றால் அவனின் தனிப்பட்ட விருப்பம் அது அதில் நாம் ஏன் தலையீடு செய்யவேண்டும். உனது வேலை என்னவோ அதனை நீங்கள் பார்க்க தொடங்கிவிட்டால் நீங்கள் எளிதில் ஆன்மீகவாதியாக மாறிவிடலாம். வாழ்க்கையில் பாதிநாள் அடுத்தவனை பார்த்தே நமது பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டோம். இனிமேலாவது திருந்தி நமது நேரத்தை நல்ல நேரமாக பயன்படுத்திக்கொள்வோம். இது ஆன்மீகத்தின் முதல் நிலை.

ஒவ்வொருவரின் கர்மாபடி அவனின் வாழ்வு அமையும். அவனின் கர்மா அவனை வழிநடத்துகிறது. ஏன் தேவையில்லாமல் அடுத்தவனின் கர்மாவில் தலையீடு செய்யவேண்டும். உங்களின் கர்மாவை நீங்கள் பாருங்கள். அடுத்தவனின் கர்மாவை நீங்கள் தலையீட்டால் அவனின் கர்மாவை நீங்கள் சேர்ந்து சுமக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: