Followers

Wednesday, June 11, 2014

அம்மன் பூஜை

வணக்கம் நண்பர்களே!

                    அடுத்த வாரத்தில் அம்மனுக்கு மாதாந்திர பூஜை செய்யப்படும். அம்மனிடம் கோரிக்கை வைத்து வேண்டுதல் வைத்தவர்கள் விரும்பினால் அம்மனின் பூஜையில் பங்குக்கொள்ளலாம்.

அம்மனிடம் ஏதாவது ஒரு வேண்டுதல் வைக்காமல் இருந்துவிடாதீர்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதனை வேண்டுதல்களாக வைத்துவிடுங்கள். உங்களுக்கு கண்டிப்பாக அந்த வேண்டுதலை நடத்திக்கொடுக்கும்.

ஜாதககதம்பத்தின் வழியாக வந்த எத்தனையோ பேர்க்கு அம்மன் நல்லதை நடத்திக்கொடுத்து இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக நல்லது செய்ய வைத்திருக்கிறேன். நீங்களும் உங்களின் வேண்டுதல்களை வைத்துவிடுங்கள்.

பல பேர்க்கு ஜாதககதம்பத்தின் வழியாக அம்மனின் தரிசனம் கிடைத்து இருக்கிறது. அவர்கள் செய்தது எல்லாம் அம்மனிடம் சரணாகதி அடைந்த காரணத்தால் அவர்களுக்கு தரிசனம் கிடைத்திருக்கிறது. எத்தனையோ பேர் அவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று நினைக்கின்றார்கள். நீங்கள் சரணாகதி அடைந்தால் கண்டிப்பாக அம்மனின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: