வணக்கம் நண்பர்களே!
என்னிடம் நமது நண்பர்கள் ஒரு சில குணப்படுத்த முடியாத நோய் உடையவர்களை அழைத்து வருவார்கள். அவர்களை எல்லாம் சித்தர்கள் வாழ்ந்த இடத்திற்க்கும் அவர்கள் ஜீவசமாதி இருக்கும் இடத்திற்க்கும் அழைத்துக்கொண்டு சென்று அங்கு தங்கவைத்த பிறகு என்னை வந்து பாருங்கள் என்று சொல்லி அனுப்பிவைப்பேன்.
பொதுவாக வெளிநாட்டு நண்பர்களுக்கு மட்டும் இதனை பரிந்துரைப்பேன். அவர்களால் செலவு செய்யமுடியும் என்பதால் இப்படி செய்வது உண்டு. ஒரு சில வியாதிகள் வயதை கடந்துவிட்டால் நம்மால் அதனை குணப்படுத்துவது கடினமாகிவிடும்.
சித்தர்களின் ஜீவசமாதிகள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடத்தில் இரவு தங்க வைத்து பிறகு அவர்களுக்கு பரிகாரம் செய்தால் அவர்கள் குணம் அடைவார்கள்.
சித்தர்களைப்பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைத்து இருந்தேன் அதனைப்பற்றி எழுதுவதற்க்கு குரு அவர்கள் மறுத்துவிட்டார். சித்தர்களைப்பற்றி தேவையில்லாமல் நாம் சொன்னால் பிரச்சினை வரும் என்று சொன்னார். தேவையில்லாமல் மாட்டிக்கொள்ளாதே என்று சொன்னார். யார்க்கு என்ன கிடைக்கவேண்டும் என்பதை சித்தர்களே முடிவு செய்வார்கள். அவர்களுக்கு சரியாக அது போய் சேர்ந்துவிடும் என்பார்.
உங்களுக்கும் சித்தர்கள் பற்றி தகவல்கள் கிடைத்தால் பெருமையாக இருக்கட்டும் என்று வெளியில் சொல்லாதீர்கள். கிடைத்த விசயம் உங்களை விட்டு போய்விடும்.
உங்களுக்குள் நடைபெறும் எந்த வித ஆன்மீக உணர்வையும் வெளியில் சொல்லக்கூடாது. நல்ல நிலையில் இருக்கும் ஆன்மீகவாதியிடம் வேண்டுமானால் சொல்லலாம். அடுத்தவர்களிடம் நீங்கள் சொன்னால் அதன் பிறகு உங்களுக்கு அது நடைபெறாது.
நீங்கள் பல பரிகாரம் செய்தும் உங்களுக்கு நல்லது நடைபெறவில்லை என்றால் சித்தர்களின் பூமிக்கு சென்று வந்த பிறகு உங்களின் வேண்டுதல்கள் மற்றும் பரிகாரங்களை செய்யுங்கள் கண்டிப்பாக நடைபெறும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment