Followers

Wednesday, June 25, 2014

இரயில் பயணம்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மன் பூஜைக்காக ஊருக்கு சென்றுக்கொண்டு இருக்கிறேன். இரவு 11:30 மணி உழவன் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறினேன். இப்பதிவை இரயில் இருந்து எழுதுகிறேன். இந்தியாவில் ஓடும் இரயிலில் மிக மிக மெதுவாக செல்லும் எக்ஸ்பிரஸ் எது என்றால் உழவன் எக்ஸ்பிரஸ் இரயில் மட்டுமே. அந்தளவு மெதுவாக செல்லும். இதில் தான் டிக்கெட் கிடைத்தது சென்று கொண்டு இருக்கிறேன். 

இப்பொழுது தான் ஆடுதுறையை சென்று அடையும்பொழுது எழுத ஆரம்பித்தேன். என்னோடு ஒரு விட்டல் பாண்டுரங்கன் பக்தர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் என்னிடம் ஆடுதுறையில் பாண்டுரங்கன் கோவில் உள்ளதா என்று கேட்டார். இந்த பகுதியில் தான் அந்த கோவில் உள்ளது என்று சொன்னேன். நான் பஸ்ஸில் செல்லும்பொழுது பார்த்து இருக்கிறேன். சரியாக எந்த இடம் என்று தெரியவில்லை. 

இந்த பகுதியில் இல்லாத கோவில்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு கும்பகோணத்தை சுற்றி கோவில்கள் இருக்கின்றன. உலகத்தில் உள்ள எத்தனை தெய்வங்கள் இருக்கின்றனவோ அத்தனை தெய்வங்களுக்கும் இந்த பகுதியில் கோவில் உள்ளது.

கோவில்கள் எல்லாம் பார்க்கவேண்டும் என்றால் இந்த பகுதிக்கு வந்து தங்கி அனைத்து கோவில்களையும் தரிசனம் செய்துவிட்டு செல்லுங்கள். எல்லா கோவில்களையும் நீங்கள் பார்ப்பதற்க்கு குறைந்தது பத்து நாட்களாகவது ஆகும். ஒவ்வொரு ஊருக்கும் சென்று பார்க்கவேண்டும் அல்லவா அதனால் சொன்னேன். பதிவை வலையேற்றும் இந்த நேரத்தில் கும்பகோணத்தை இரயில் அடைந்துவிட்டது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: