Followers

Monday, January 20, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 14


வணக்கம் நண்பர்களே!
                    போன ஜென்மத்தில் நான் எப்படி இருந்தேன் என்று தெரியவில்லை இந்த ஜென்மத்தில் நான் நல்லவனாக தான் இருக்கின்றேன் ஆனால் எனக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வருகின்றது என்று சொல்லுபவர்கள் அதிகம். சோதிடத்தின் ஆணிவேரை பூர்வஜென்மத்தில் தான் இருக்கின்றது. 

உங்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வரட்டும் ஆனால் நீங்கள் தவறு செய்யாமல் இருக்கின்றீர்களாக என்று தான் பார்க்கவேண்டும். கிரகங்கள் உங்களை வம்புக்கு இழுக்கும் ஆனால் நீங்கள் அதற்கு போககூடாது. 

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஒவ்வொரு பிரச்சினை கண்டிப்பாக இருக்கும் என்ன ஒன்று என்றால் பிரச்சினை எப்படிப்பட்டது என்று பார்க்கவேண்டும். பிரச்சினை என்பது நிரந்தரமாக இருக்குமா அல்லது போய்விடுமா என்று பார்க்கவேண்டும்.

ஒரு சிலருக்கு தலைக்கு மேல் மின்விசிறி ஒடலாம். ஒருவருக்கு தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு தலைக்குமேல் இடியே விழ காத்து கொண்டிருக்கும் எப்படியும் பிரச்சினையில் சிக்குவது என்று முடிவாகிவிட்டால் நீங்கள் செய்யவேண்டியது உங்களை ஒழுங்குப்படித்துக்கொள்ள வேண்டும். இந்த ஜென்மத்தில் எந்த ஒரு தவறையும் செய்யாமல் இருப்பது உத்தமம். இதுவரை தவறு செய்தால் கூட இனி செய்யாமல் இருப்பது நல்லது.உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வேலியை உருவாக்கிக்கொள்வது உத்தமம்.

எப்படி பாதுகாப்பு வேலியை உருவாக்கிக்கொள்வது என்று கேட்க தோன்றும்.

உங்களுக்கு எல்லாம் தெரிந்த பிரபல தொழில் அதிபர்கள் நாட்டில் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையை கொஞ்சம் உற்று பாருங்கள். அவர்கள் நமது அப்பா காலத்தில் இருந்து தொழில் செய்துக்கொண்டு இருப்பார்கள். நம் காலத்திலும் தொழில் செய்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களின் வாரிசுகளும் இப்படியே இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் அப்படி ஒன்று சிறந்த ஜாதகம் என்று சொல்லமுடியாது ஆனாலும் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு எல்லாம் ஒருவருடம் கூட ஒழுங்காக வாழமுடியவில்லை ஆனால் இவர்கள் பல காலம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்களே நினைத்து பாருங்கள் இவர்களுக்கு எல்லாம் ஏழரைச்சனி மற்றும் அஷ்டமசனி அல்லது கெடுதலான தசா எல்லாம் வராதா?

எப்படி தான் ஜாதகத்தில் நல்ல நிலையில் கிரகங்கள் இருந்தாலும் முப்பது வருடத்திற்க்கு மேல் நன்றாக வாழமுடியாது ஆனால் இவர்கள் பல காலம் வாழ்க்கின்றனர். அனைத்து ராசியையும் கோச்சாரப்படி சனி கடக்க முப்பது வருடங்கள் எடுத்துக்கொள்ளும் இதில் இருபது வருடங்கள் கெடுதல் தான் செய்யும். சோதிடத்தை பொருத்தவரை திரும்பும் பக்கம் எல்லாம் ஆப்பு தான் இருக்கும் அப்படி எல்லாம் சோதிடத்தில் இருக்கும்பொழுது எப்படி இவர்கள் பெயர் சொல்லுவது போல் வாழ்கின்றனர். என்றாவது ஒரு நாள் நீங்கள் சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா?

தொடரும்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

antonyarun said...

Interesting topic expecting next
Thanks
Antony

rajeshsubbu said...

வணக்கம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.