வணக்கம் நண்பர்களே!
தை அமாவாசை நாளை வருகிறது. நீங்கள் எடுக்கின்ற எந்த காரியத்திலும் தடை இல்லாமல் நடைபெறவேண்டும் என்றால் பித்ருக்களுக்கு நீங்கள் தர்பணம் செய்யவேண்டும். இதுவரை நீங்கள் செய்யாமல் இருந்தால் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நான் பழைய பதிவில் நிறைய சொல்லியுள்ளேன். பித்ரு தோஷ நிவர்த்திக்கு தை அமாவாசை ஒரு நல்ல நாள்.ஒருவர் என்ன தான் கோவில் குளங்கள் என்று திரிந்தாலும் பித்ருக்கள் மனதை வைத்தால் மட்டுமே காரியம் நடைபெறும் அப்படி அவர்கள் மனதை வைக்க தை அமாவாசை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பல நண்பர்கள் என்னிடம் போனில் தொடர்புக்கொண்டு பேசினார்கள் அவர்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டேன். யாராவது தெரியாமல் இருக்ககூடும் என்பதால் இந்த பதிவை தருகிறேன்.
முடிந்தவரை புண்ணியநதிகள் என்று சொல்லக்கூடிய இடத்தில் செய்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தகுந்தார்போல் உங்களின் வீட்டிற்க்கு அருகில் உள்ள இடத்தில் செய்துக்கொள்வது நல்லது. காகத்திற்க்கு உணவை அளிப்பது சிறந்தது. பசுவிற்க்கு நீங்கள் உணவு கொடுத்தாலும் காகத்திற்க்கு செய்வது சிறப்பான ஒன்று. மற்றவை உங்களின் பழக்கத்திற்க்கு தகுந்தார்போல் செய்துக்கொள்வது நல்லது.
விரதம் இருப்பதும் சிறப்பு தான். ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருக்கலாம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் யாரும் அப்படி செய்வதில்லை அதனால் அனைத்திற்க்கும் முக்கியமான தை அமாவாசையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
விரதம் இருப்பதும் சிறப்பு தான். ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருக்கலாம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் யாரும் அப்படி செய்வதில்லை அதனால் அனைத்திற்க்கும் முக்கியமான தை அமாவாசையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Arumai sir
Post a Comment