Followers

Saturday, January 4, 2014

அம்மன் தரிசனம்


ணக்கம் ண்பர்களே!
                    புதுவருடம் பிறந்ததில் இருந்து எந்த கோவிலுக்கும் செல்லாமல் இருந்தேன். நேற்று ஒரு பிளான் செய்து சரி திருவக்கரை அம்மனேயே சென்று தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம் என்று இன்று காலையில் சென்று விட்டேன்.

இந்த வருடத்தில் முதல் முதலாக ஒரு கோவிலுக்கு செல்வதும் இதுதான். கோவிலில் சென்று தரிசனம் செய்யும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது. 

மனிதன் மனிதன் மீது பாசம் வைக்கலாம் ஆனால் தெய்வம் மனிதன் மீது பாசம் வைப்பது மிகபெரிய செயல் அது. அப்படி ஒரு பாசத்தை அந்த அம்மன் என் மீது காட்டும் அந்த ஒரே காரணத்தால் மட்டுமே அங்கு அடிக்கடி சென்று வர நினைப்பேன். 

உண்மையில் நான் எதுவும் அதனிடம் கேட்கமாட்டேன். ஆனால் அங்கு இருக்கும்பொழுதே எனக்கு என்ன என்ன தேவை என்று பார்த்து உடனே செய்துவிடும். ஒரு சில தடவை நான் சென்னையில் இருந்து கிளம்பும்பொழுதே என்ன என்ன தேவை என்று பார்த்து செய்துவிடும் அங்கு சென்றவுடன் நிம்மதியை அது எனக்கு கொடுத்துவிடும்.

இதனை படிக்கும்பொழுது பைத்தியம் போல் தோன்றும் ஆனால் இந்த நிலையில் நீங்கள் இருந்து பார்த்தால் உங்களுக்கு தெரியும் அது சொர்க்கம் என்று அப்பொழுது மட்டுமே புரியும். இதனை படிக்கும் நீங்களும் ஒரு முறை சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

CHITRA said...

Dear sir,
I want to know about Pithru dosham . Please explain about it in your coming sessions. What is the remedy for it? Suppose any body dies( Forefthers) in the family by suicide, will it affect the generations?