வணக்கம் நண்பர்களே!
நான் பூஜை செய்யும்பொழுது எக்காரணம் கொண்டும் கற்பூரம் ஏற்றமாட்டேன். அப்படி கற்பூரம் ஏற்றுவதற்க்கு எனறு ஒரு சில விதிகள் உள்ளது அப்பொழுது தான் ஏற்றுவது உண்டு. ஏன கற்பூரம் ஏற்றக்கூடாத என்று கேட்கதோன்றும் கற்பூரத்தை ஏற்றினால் அம்மன் மிகவும் ஆக்கோரஷமாக தாக்க ஆரம்பிக்கும் அதனால் ஏற்றுவதில்லை.
பொதுவாக எந்த காரியத்திற்க்கும் சாந்தப்படுத்தி அம்மனை அனுப்பி வைப்பது தான் எனது வேலையாக இருக்கும். ஏன் என்றால் கொஞ்சம் பிரச்சினை என்றாலும் சம்பந்தப்பட்ட நபரை தாக்கிவிடும் என்பதால் அப்படி செய்வது உண்டு.
கோவில்களில் ஆடு ,கோழி பலி கொடுத்தாலும் நான் அந்த இடத்தில் நிற்பது கிடையாது காரணம் என்ன என்றால் நம்மிடம் இருக்கும் அம்மன் அதனை ஏற்க ஆரம்பித்துவிடும் என்பதால் அப்படி செய்வது கிடையாது. இரத்தத்தை கண்டுவிட்டால் அவ்வளவு தான் மறுபடி மறுபடி கேட்க ஆரம்பிக்கும். நம்ம பிழைப்பு அவ்வளவு தான்.
அம்மனுக்கு பொதுவாக கோவில்களில் கொடுப்பதை தவிர வேறு எதுவும் நான் கொடுப்பதில்லை. ஏன் என்றால் அது மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடும். இரத்தம் கொடுத்துவிட்டு இரத்தம் இல்லை என்றால் என் இரத்தத்தை எடுக்க ஆரம்பித்துவிடும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment