கடந்த பதிவில் சொன்ன வார்த்தை நம்ம பெற்றோர் நன்றாக வாழ்ந்தால் நாம் நன்றாக வாழமுடியும் என்பதை காட்டுகிறது. ஒரு சிலருக்கு பெற்றோர்கள் கூட இல்லாமல் நன்றாக வாழ்வார்கள் அது தனிக்கதை. ஒரு சில பெற்றோர்கள் நன்றாக வாழ்ந்தும் அவர்களின் ஒரு சில குழந்தைகள் நன்றாக வாழமுடியாமலும் செல்லுகிறது இதற்கு எல்லாம் காரணம் பூர்வபுண்ணியம் என்று சொல்லலாம்.
சரி இப்பொழுது மேட்டருக்கு வருவோம். ஒருத்தர் நன்றாக வாழவேண்டும் என்றால் அவருக்கு சோதிடத்தை பொருத்தவரை உயிர் என்றும் ஆத்மா என்றும் அழைக்கப்படும் லக்கினாதிபதி நன்றாக இருக்கவேண்டும். லக்கினாதிபதி நன்றாக இருந்தால் அவன் வாழ்க்கையை அனைவரும் ரசிக்கமுடியும். லக்கினாதிபதி நன்றாக இல்லை என்றால் அவன் வாழ்க்கை ரசிக்கமுடிவதில்லை.ஒரு சிலருக்கு லக்கினாதிபதி கெட்டும் நன்றாக இருக்கின்றனர்.
ஜாதகத்தில் உள்ள அனைத்தும் கிரகங்களும் கெட்டாலும் மனிதனுக்கு ஒரு வாய்ப்பை கடவுள் தருவார். கடவுள் அன்பு மயமானர் அல்லவா அதனால் ஒரு வாய்ப்பு என்பது நிச்சயம் கிடைக்கும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவேண்டும் அப்படி பயன்படுத்த தவறினால் மீண்டும் வாய்ப்பு என்பது அடுத்த ஜென்மத்தில் மட்டுமே கிடைக்கும்.
ஒரு சிலருக்கு அனைத்து கிரகங்களும் கெட்டுபோனாலும். கோச்சாரப்பலன்கள் வழியே மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்துவிடும். ஒரு ஜாதகத்தை எடுத்து பார்த்தவுடனே நமக்கு நன்றாக புரிந்துவிடும் இந்த ஒரு கிரகத்தை வைதது நாம் வாழ்ந்துவிடலாம் என்று தோன்றும். அந்த ஒரு கிரகத்தால் நமது வாழ்க்கையில் அனைத்தையும் கிடைக்க செய்துவிடலாம்.
உங்களின் ஜாதகத்தில் முதலில் நாம் தேர்வு செய்வது லக்கினாதிபதி அல்லவா. லக்கினாதிபதி முதலில் எங்கு உள்ளது என்று பார்த்தால் தெரிந்துவிடும்.
பரிகாரம் என்பது கடவுளே கொடுத்த ஒரு வாய்ப்பு அந்த வாய்ப்பு எங்கு இருந்து நமக்கு கிடைக்கும் என்று லக்கினாதிபதியை பார்த்தே தெரிந்துக்கொள்ளமுடியும். அனைத்து பரிகாரமும் சோதிடர்களின் வழியில் தான் கிடைக்கும் என்று நினைப்பது தவறு. சோதிடர்கள் செய்தால் கூட அதற்கு வழிகாட்டுதலுக்கு ஒருவர் வரவேண்டும் அல்லவா. அந்த நபர் யார்?
உங்களுக்கு இருக்கும் தோஷத்தை போக்க இவர்கள் மனது வைத்தால் மட்டுமே போக்கமுடியும். இது கடவுள் கொடுத்த வாய்ப்பு.
லக்கினாதிபதி லக்கினத்தில் இருந்தால் இவருக்கு பரிகாரம் செய்வதற்க்கு இவர்களே முயற்சி செய்வார்கள் அல்லது இவரின் துணைவர் வழியில் கிடைக்கும்.
லக்கினாதிபதி இரண்டாவது வீட்டில் இருந்தால் இவருக்கு பரிகாரம் செய்வதற்க்கு இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களே இருப்பார்கள்.
லக்கினாதிபதி மூன்றாவது வீட்டில் இருந்தால் இவருக்கு பரிகாரம் செய்வதற்க்கு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இருப்பார்கள் அல்லது இளைய சகோதர் இருப்பார்.
லக்கினாதிபதி நான்காவது வீட்டில் இருந்தால் இவருக்கு பரிகாரம் செய்வதற்க்கு தாய் அல்லது தாய்வழியில் உள்ளவர்கள் இருப்பார்கள்.
லக்கினாதிபதி ஐந்தாவது வீட்டில் இருந்தால் இவரின் முன்ஜென்மத்தில் மற்றும் பூர்வீகத்தில் உள்ள உறவுக்காரர்கள் இருப்பார்கள்.
லக்கினாதிபதி ஆறாவது வீட்டில் இருந்தால் எதிர்கள் அல்லது வேலையாட்கள் வழியில் இருப்பார்கள்.
லக்கினாதிபதி ஏழாவது வீட்டில் இருந்தால் உங்களின் துணைவர் உங்களுக்கு இருப்பார்.
லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் இருந்தால் நீங்களே செய்துக்கொள்வீர்கள்.
லக்கினாதிபதி ஒன்பதாவது வீட்டில் இருந்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது தந்தை வழியில் உள்ளவர்கள் இருப்பார்கள்.
லக்கினாதிபதி பத்தாவது வீட்டில் இருந்தால் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் உள்ளவர்கள் இருப்பார்கள்.
லக்கினாதிபதி பதினோராவது வீட்டில் இருந்தால் உங்களின் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர சகோதரிகள் உங்களுக்கு இருப்பார்கள்.
லக்கினாதிபதி பனிரெண்டாவது வீட்டில் இருந்தால் நீங்கள் செல்லும் தவறான வழியில் உள்ளவர்களே உங்களுக்கு உதவுவார்கள். மற்றும் மருத்துவமனை அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட இருப்பார்கள்.
மேலே சொன்னவை மேலோட்டமாக பார்த்தால் என்னடா என்று தோன்றும் ஆனால் நீங்கள் இவர்களை வைத்து நீங்கள் முன்னேற்றம் அடையமுடியும்.
மேலே நான் சொன்னவற்றை வைத்து பார்த்தால் எப்பேர்பட்ட தோஷத்தையும் இவர்களால் உங்களுக்கு போக்கமுடியும் என்பதை உங்களின் அனுபவத்திலேயே தெரிந்துவிடும்.
இது போதும் என்று நினைக்கிறேன் மேலும் விபரங்களுக்கு கட்டண சோதிடத்தில் வந்து என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment