வணக்கம் நண்பர்களே !
ஒரு சில சாமியார்கள் காடுகளுக்கு சென்று தன்னுடைய பயிற்சியை ஆன்மீகபயிற்சியை செய்வார்கள். இவர்கள் செல்வது கடும் அடத்தியான வனப்பகுதிக்கு சென்று அங்கு தங்கி இதனை எல்லாம் செய்வார்கள். அவர்கள் அங்கு சென்று தங்கும்பொழுது வனவிலங்குகள் தங்களை தாக்ககூடாது என்று அவர்கள் அதற்கு என்று விசேசகட்டுக்களை போடுவார்கள்.
காடுகளுக்கு சென்று அங்கிருந்து வெளியில் செல்லும்பொழுது தன்னுடைய வாயில் ஒரு சில மூலிகைகளை வைத்திருப்பார்கள். எதிர்பாராத விதமாக எதுவும் வந்துவிட்டால் வாயில் இருந்து எச்சலை துப்பிவிடுவார்கள்.
மூலிகைகளை கலந்த எச்சில் விழுந்தவுடன் அவரை சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்பட்டுவிடும். அவரை எவ்வளவு பெரிய விலங்கும் மற்றும் எந்த சக்தியும் அவரை ஒன்றும் செய்யமுடியாது அப்படியே அடிபணிந்துவிடும்.
எப்பேர்பட்ட அடர்ந்த காட்டிலும் எந்த சாமியாரும் விலங்குகள் தாக்கி உயிர் இழந்ததாக செய்தி வராது. வராதற்க்கு காரணம் இவர்கள் தங்களை காக்கும் முறையில் இதுவும் ஒன்று. மூலிகை என்ன என்று கேட்காதீர்கள். பல் இடுக்குகளில் அதனை வைத்திருப்பார்கள்.
இதனால் பல் கெடுவதற்க்கு வாய்ப்பு உண்டு. காடுகளுக்கு செல்லும்பொழுது இதனை பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். இது எல்லாம் வெளியில் நான் செல்லுவதற்க்கு காரணம் இந்த மாதிரி தேடுதல் உள்ளவர்கள் நன்றாக விருப்பபட்டு தேடிச்செல்வார்கள் என்ற காரணத்தால் மட்டுமே.
நான் பயன்படுத்தி உள்ளேன். இப்பொழுது எல்லாம் புறப்பொருட்களை நான் வைத்துக்கொள்வதில்லை. நான் காடுக்களுக்கு செல்வதையே இப்பொழுது விட்டுவிட்டேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
வர வர சுய புராணம் அதிகமா இருக்கே பாஸ், என்ன காரணம்? நீங்க கடவுளோட கருவியா, இல்லே நீங்க தான் கடவுளா?
Post a Comment