Followers

Friday, January 3, 2014

ஆன்மீக அனுபவங்கள் 146


வணக்கம் நண்பர்களே !
                   ஆன்மீக அனுபவத்தில் இந்த பகுதியில் உணவு முறையால் எப்படி நமது ஆன்மீகம் தடைப்படும் என்று சொல்லுகிறேன்.

தேவையற்ற உணவுகளை உண்ணாதீர்கள். ஒரு சிலர் வீட்டில் இருந்துக்கொண்டு இஷ்டத்திற்க்கு சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உடல் பருத்துவிடும். ஒவ்வொரு வியாதியும் எட்டி பார்த்துக்கொண்டே இருக்கும். உடல் லேசாக இருக்கும்பொழுது மட்டுமே ஆன்மீக எண்ணங்கள் வரும். உடலில் பாரம் ஏறிவிட்டால் ஆன்மீக எண்ணங்கள் வராது.

பெண்களும் அதிகமாக சாப்பாட்டிற்க்கு அடிமையாகிவிட்டார்கள் என்று தோன்றுகிறது அவர்கள் வீட்டில் சமைத்தாலும் அவர்கள் வாயை கட்டவேண்டும். சமைக்கும்பொழுதே இருக்கின்ற உணவுகளை ருசி பார்க்கிறேன் என்று சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஜீரண உறுப்பை காட்டும் இடம் ஆறாவது வீடு இந்த வீடு நன்றாக பலம் பெற்றுவிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆறாவது வீடு நன்றாக பலம் பெறும்பொழுது அதற்கு பனிரெண்டாவது வீடு அடிவாங்கிவிடும். பூர்வபுண்ணியம் அடிவாங்கிவிடும் அப்பொழுது இளம்வயது பெண்களாக இருந்தால் உடல் பருத்து அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. சரியான முறையில் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.

அசைவம் சாப்பிடுவதை நான் தவறு என்று சொல்லுவதில்லை ஆனால் தினமும் சாப்பிடவேண்டும் என்று நினைக்ககூடாது மாதத்திற்க்கு ஒரு முறை என்று வைத்துக்கொள்ளுங்கள். மீன் மட்டும் அடிக்கடி பயன்படுத்திக்கொள்ளலாம். நான் அசைவம் சாப்பிட்டாலும் மீன் மட்டும் தான் விரும்பிசாப்பிடுவது பழக்கம் அதுவும் கடல் மீன் மட்டும் சாப்பிடவேண்டும். 

சாப்பாடு என்பது உங்களுக்கு புத்துணர்வை கொடுக்கவேண்டுமே தவிர தூக்கத்தை அதிகம் கொடுக்ககூடாது. அப்படிபட்ட உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.

உடலுக்கு கண்டிப்பாக உடற்பயிற்சி என்பது முக்கியமான ஒன்று. உடற்பயிற்சி இல்லை என்றால் உடலில் எல்லா இடத்திலும் முடிச்சு என்று ஒன்று விழுந்துவிடும் இரத்தம் ஒட்டம் இல்லாமல் தடைப்பட்டு நோய்வந்துவிடும்.

வயது ஏற ஏற இளமை என்பது திரும்பவேண்டும். வயதாகிவிட்டது என்று உட்கார்ந்துவிட்டால் முதுமை உங்களை கைது செய்துவிடும். என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் கண்களுக்கு உடற்பயிற்சி செய்யமுடியாது கண் முதுமையை காட்டிக்கொடுத்துவிடும் அதற்கு தியானம் செய்தால் மட்டுமே கண் இளமையோடு இருக்கும்.

ஒரு நடிகர் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார் அல்லவா. அவர் ஒரு பகுத்தறிவாதி அல்லவா. அவர் உடலை இளமைபோல் வைத்திருப்பார். அவர் கண்ணை பார்த்தால் அவரின் வயதை கண்டுபிடித்துவிடலாம். உடலுக்கு பயிற்சி செய்தால் உடல் இளமையாக இருக்கும் என்று பகுத்தறிவாதிக்கு தெரிந்த விசயம். கண்ணிற்க்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியவில்லை கண்களில் கோட்டையை விட்டுவிட்டார்.கண்ணிற்க்கு தியானம் செய்தால் மட்டுமே இளமை வரும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: