Followers

Wednesday, January 29, 2014

ஆன்மீக அனுபவங்கள் 151


வணக்கம் நண்பர்களே!
                    கும்பிட்ட கும்பிட்டு என்ன கண்டோம் சாமியை கும்பிடாமலேயே இருந்துவிடலாம் என்று சொல்லுவார்கள் இதனைப்பற்றி சொல்லுங்கள் என்று ஒரு நண்பர் கேள்வி அனுப்பி இருந்தார் அவருக்காக இந்த பதிவு.

கும்பிட்டு கும்பிட்டு என்ன கண்டோம் என்று சொல்லும் வார்த்தை எல்லாம் நீங்கள் சென்ற வழி தவறாக இருக்ககூடும். நேற்று ஒரு பதிவில் சொல்லிருந்தேன் உங்களுக்குள் தேடாமல் உங்களால் முழுமை பெறமுடியாது என்றேன்.

கோவிலில் மட்டும் தேடிக்கொண்டிருந்தால் என்ன செய்யமுடியும் உங்களுக்குள்ளேயும் தேடவேண்டும். முதல் நிலையில் இருப்பவர்கள் கோவிலுக்கு சென்று கும்பிடலாம். கும்பிட்டு பிறகு உங்களுக்குள் தேடும்பொழுது இறைவன் உங்களுக்கு கேட்டதை தருகிறான்.

ஊரில் ஆன்மீகவாதிகள் போல் வேஷம் போட்டு திரியலாம் பார்க்கிறவர்கள் அனைவரும் ஆன்மீகவாதியாக இருக்கிறான் அவனுக்கு ஆயிரதெட்டு பிரச்சினை என்று கேலிசெய்வார்கள். அவன் வேஷம் போட்டு அவனுக்குள்ள பிரச்சினையே தீர்க்கமுடியவில்லை என்றால் அவன் உண்மையான இறைவனை நாடமுடியவில்லை என்று தான் அர்த்தம்.

நான் கும்பிடும்பொழுது எனது மனநிலை எப்படி இருந்தது என்றால் கண்டிப்பாக எடுத்தே ஆகவேண்டும் அதை விட்டால் வேறு வழி இல்லை என்று தான் இருந்தேன். நீங்கள் என்ன செய்வீர்கள் முதலிலேயே அதனைப்பற்றி அவநம்பிக்கை கொண்டுவிடுவீர்கள். வைக்கின்ற நம்பிக்கையில் தான் அனைத்தும் இருக்கின்றது.

கும்பிடுவது மட்டும் இல்லாமல் உள்முகமாக திரும்பினால் கிடைததுவிடும் அப்புறம் யாரையும் நாடிச்செல்லவேண்டியதில்லை. கும்பிடவும் வேண்டும் அதேப்போல் உள்முகமாகவும் திரும்பவும் வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: