வணக்கம் நண்பர்களே!
ஜாதகத்தை கையில் எடுத்து பார்க்கும்பொழுது புத்தகத்தை முற்றிலும் சரியாக இருக்கின்றதா என்று பாருங்கள். ஒரு நிகழ்வை சொல்லுகிறேன் பாருங்கள்.
எனக்கு தெரிந்த ஒரு கல்லூரி பேராசியையைக்கு திருமணம் நடக்கவில்லை என்று சொன்னார்கள். நான் அவர்களின் ஒரிஜினல் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லிருந்தேன். அது போல் அவர்களும் எடுத்து வந்துக்கொடுத்தார். அதனை நான் பரிசோதனை செய்யும்பொழுது அந்த ஜாதகபுத்தகத்தில் அவரின் அப்பா இறந்த அன்று நடந்த செலவு கணக்கை எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஒரு கெட்டது நடந்த செலவு கணக்கை வேறு நோட் புக் கிடைக்காமல் இவரின் ஜாதகத்தின் நோட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் விதி எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள். நான் அதில் உள்ள பிறந்த தேதி நேரத்தை மட்டும் குறித்துவிட்டு புது ஜாதகத்தை எழுதிக்கொடுத்தேன்.
நான் ஜாதகம் எழுதிக்கொடுத்தபொழுது அந்த பெண்ணிற்க்கு வயது 36. அவரின் ஜாதகத்தில் சனிக்கிரகம் ஏழாவது வீட்டில் இருந்தது. ஒரு சின்ன பரிகாரம் மட்டும் செய்ய சொல்லிவிட்டு திருமணத்திற்க்கு மாப்பிள்ளை உடனே பார்த்துவிடுங்கள் என்று சொன்னேன். கிரகங்கள் அவ்வளவு எளிதாக யாரையும் விடுமா என்ன? இவர்கள் என்னை பார்த்துவிட்டு நேராக ஊரில் ஒரு சோதிடரிடம் சென்று ஜாதகத்தை காட்டியுள்ளார்கள்.
அந்த சோதிடர் யார் இந்த ஜாதகத்தை எழுதியது சனிக்கிரகம் எனக்கு ஆறில் வருகிறது என்று சொல்லியுள்ளார். முடிந்தது கதை. குழப்பத்தை ஆரம்பித்துவிட்டது சனி என்று நினைத்துக்கொண்டு நான் இருந்துவிட்டேன். இதுவரை அந்த பெண்ணிற்க்கு திருமணம் நடைபெறவில்லை. கிரகங்கள் இப்படி தான் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
உங்களி்ன் ஜாதக நோட் என்பது மிகவும் முக்கியமானவை அதில் எந்த விபரமும் எழுதகூடாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னிடம் சோதிடம் பார்க்கும்பொழுது ஒரு சிலர் ஜாதகத்தை எடுத்துவரமறந்துவிடுவார்கள். ஒரு சிலருக்கு ஜாதகநோட் அவர்களின் கையில் கிடைக்கவே கிடைக்காது. இவனிடம் ஜாதகம் சென்றால் ஏதாவது செய்துவிடுவான் என்று கிரகங்களே மறைத்துவிடுவது உண்டு. நீங்கள் வேண்டுமானால் சோதனை செய்து பார்க்கலாம். அதேபோல் என்னை சந்திக்க வருபவர்கள் கூட ஒழுங்காக என்னை வந்து சந்திக்கமுடியாது.
இது எல்லாம் எதனை காட்டுகிறது என்றால் நம்மை மிகவும் எச்சரிக்கையாக கிரகங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஒரு சிலரால் போன் கூட செய்யமுடியாது.
தொடர்ந்து பார்க்கலாம்...
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment