வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலத்தில் பிராமணர்களுக்கு ஏற்படும் தோஷம் போல வேறு சாதியில் உள்ளவர்களுக்கு ஏற்படுவது இல்லை என்ற தான் எனக்கு தோன்றுகிறது. எனக்கு குரு தசா நடப்பதால் என்னவோ தெரியவில்லை என்னை நாடிவருபவர்கள் அதிகம் பேர் பிராமணர்களாக இருக்கின்றனர்.
இன்று கூட ஒரு ஐயா அவர்கள் வந்திருந்தார் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் கடுமையான பித்ரு தோஷம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களில் மொத்தம் அந்த ஐயாவோடு சேர்த்து ஆறு பேர். ஆறு பேரில் மூன்று பேருக்கு திருமணம் நடைபெறவில்லை. ஒருவர் இறந்துவிட்டார். ஐயாவின் மகன்களுக்கும் திருமணம் நடைபெற்று ஒருவர் விவாகாரத்து வாங்கிவிட்டார் ஒருவர் திருமணம் செய்து குழந்தை பாக்கியம் இல்லை.
அவரிடம் உங்களின் முன்னோர்கள் செய்த பாவம் என்ன என்று கேட்டேன். அப்பொழுது தான் சொன்னார். ஒரு பெண் தீ கொளுத்திக்கொண்டு எங்களின் தாத்தாவால் இறந்துவிட்டது என்று சொன்னார். இன்னும் பல காரணங்கள் சொல்லிருந்தார்.
ஒருவர் எப்படி இறக்கவேண்டும் என்பதைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருகிறேன். ஒருவர் தீயால் இறந்தால் அவரின் ஆத்மா கோரமாக மாறிவிடும். அது பலிவாங்காமல் இருக்காது.
தற்கொலை செய்யும்பொழுது கூட கடைசியில் எப்படியாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று போராடும் அதனாலே அது கோரமாக மாறுவது உண்டு.அப்படிப்பட்ட ஆத்மா என்ன செய்யும் என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களை பலிவாங்கிக்கொண்டே இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் ஆத்மாவோடு அது இருக்க ஆரம்பிக்கும். அப்பொழுது பிரச்சினை மேல் பிரச்சினையை வாங்கவேண்டிவரும்.
இப்படிப்பட்ட ஆத்மா உங்களோடு இருக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை மட்டுமே. நீங்கள் என்ன தான் செய்தாலும் அதில் இருந்து தப்பிக்கமுடியாது. ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் பித்ருதோஷமாக அதனை காட்டும். அப்பொழுது அதற்கு தகுந்த பரிகாரம் செய்யவேண்டும்.
உங்களின் ஊரில் உள்ளவர்களை தொடர்புக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் பரிகாரம் செய்துக்கொள்வது நல்லது. அதன் பிறகு உங்களின் பிரச்சினையை சரிசெய்துக்கொள்ளலாம்.அந்த ஆத்மாவை சாந்தப்படுத்தாமல் நீங்கள் என்ன தான் சாமி கும்பிட்டாலும் உங்களால் கடவுளின் அருளை பெறமுடியாது.
ஒரு சில பேர் இதற்க்காக இருக்கின்றனர். ஆத்மாவை சாந்தப்படுத்தும் வேலையில் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள் அவர்களிடம் நீங்கள் அணுகும்பொழுது தகுந்த பரிகாரத்தை செய்து தருவார்கள். உங்களுக்கு மற்றும் எதிர்கால சந்ததினரும் பயன்பெறும் வகையில் செய்துககொண்டுவிடுவது நல்லது. என்ன தான் பணம் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினாலும் உங்களின் சந்ததியும் முக்கியம் அல்லவா தகுந்த பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment