பொதுவாக யாருக்கும் அவ்வளவு எளிதில் எதையும் செய்யகூடாது என்று சொல்லுவார் குரு. அதற்கு காரணம் அவர்களின் கர்மா அப்படி இருக்கிறது அந்த கர்மாவை தொலைக்க அவர்கள் போராடட்டும் என்று சொல்லுவது வழக்கம். ஒரு தடவை சந்திப்பில் அனைத்தும் நடத்திவிடகூடாது என்று சொல்லுவார்.
கர்மாவின் பிடியில் இருக்கும் மக்களை காப்பாற்ற தான் சந்நியாசிகளை படைக்கிறார் கடவுள். ஆனால் அதற்கும் ஒரு விதி இருக்கிறது அநத விதிக்கு உட்பட்டு இருக்கும்பொழுது மட்டுமே சந்நியாசி செய்வார்.
ஒரு சிலர் எங்களிடம் வரும்பொழுது அவர்களை தண்ணீர் காட்டுவது வழக்கம். பொறுமையை கடுமையாக சோதனை செய்வதும் உண்டு. அவர்களிடம் பணம் என்பது வாங்குவது கிடையாது. பணத்தை வாங்கிவிட்டால் அவர்களுக்கு சொன்னபடி நாம் செய்துக்கொடுக்கவேண்டும் அதனால் வாங்குவது கிடையாது. விடாமல் எங்களை துரத்திக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் செய்து தருவது உண்டு.
யார் இழுத்த இழுப்புக்கும் நாங்கள் போககூடாது. நாங்கள் இழுக்கும் இழுப்புக்கு தான் அவர்கள் வரவேண்டும் என்பது எங்களின் கொள்கை. நீண்ட நாட்கள் வரை சம்பந்தப்பட்ட நபர் தாக்குபிடித்துவிட்டால் அவருக்கு அனைத்தும் கிடைத்துவிடும். அந்த ஊரில் அவர் தான் கிங் என்ற அளவுக்கு செய்துவிடுவது உண்டு.
நான் சோதிடர் தான் கிரகங்களை நம்புகிறவன் தான் ஆனால் செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால் இருக்கின்ற கிரகங்கள் வேடிக்கையை தான் பார்க்கவேண்டும். நான் செய்து முடித்தபிறகு தான் கிரகங்கள் வேலை செய்யும். அப்படி என்றால் எப்பேர்ப்பட்ட சக்தி இருக்கும். அது தான் அம்மன் சக்தி.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment