Followers

Monday, January 6, 2014

குரு தசா பலன்கள் பகுதி 71


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சுக்கிரனின் புத்தியை பார்த்து வருகிறோம். சுக்கிரன் ஏழாவது வீட்டில் இருந்து தனது புத்தியை நடத்தும்பொழுது அழகான துணைவர் வருவார். அவரால் பிரச்சினையும் ஏற்படும். உங்களோடு அதிகமான தொடர்பு வைத்திருப்பவர்கள் பெண்களாக இருக்கும்.

சுக்கிரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அதிகமான தனவரவை ஏற்படுத்துவார். துணைவரோடு பிரியும் நிலை ஏற்படும். வெளியூர்களில் வசிக்கும் நிலை ஏற்படும்.

சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் இருந்தால் பிராமணர் அல்லாத ஆன்மீகவாதிகளோடு தொடர்பு ஏற்படும். வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் ஏற்படுத்தி கொடுப்பார். ஊரில் அம்மன் கோவில் திருவிழா அல்லது குடமுழக்கு நடத்துவீர்கள்.

சுக்கிரன் பத்தாவது வீட்டில் இருந்தால் பேன்சி தொழில்களில் நாட்டம் அதிகரிக்கும். அழகு சாதன தொழில் நடத்துவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

சுக்கிரன் பதினோராவது வீட்டில் இருந்தால் பெண்கள் வழியில் லாபம் ஏற்படும். சகோதரிகளின் உதவி கிடைக்கும். பெண்கள் உங்களின் முன்னேற்றத்திற்க்கு உதவி செய்வார்கள்.

சுக்கிரன் பனிரெண்டாவது வீட்டில் இருந்தால் உங்களுக்கு திருமணம் நடைபெறும். போகத்திற்க்கு அதிக செலவு செய்வீர்கள். மர்ம உறுப்பு வழியாக நோய் வரும் எச்சரிக்கை.தன்னை அழகுப்படுத்திக்கொள்ள ஆசைப்படுவீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: