Followers

Saturday, January 18, 2014

குரு தசா பலன்கள் பகுதி 76


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இதில் ஒவ்வொரு புத்தியாக பார்த்து வருகிறோம். குரு தசாவில் பொதுவான ஒரு தகவலை பார்க்கலாம்.

குரு தசா என்பது ஆன்மீகவாழ்விற்க்கு மிகப்பெரிய அளவில் உதவிச்செய்யகூடிய ஒரு தசாவாக இருக்கின்றது என்று பழைய பதிவில் பார்த்திருக்கிறோம். ஒருவருக்கு குரு தசா நடைபெற்றால் குரு எப்படி பாதிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட நபர் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவார்.

ஒருவர் ஆன்மீகத்திற்க்கு என்று சென்றால் சிறிய காலத்தில் எல்லாம் ஆன்மீகத்திற்க்கு ஒரு குரு தேவை என்று குருவை தேட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் ஆன்மீக பசிக்கு தேடுதல் வேட்டை நிறைய நடத்துவார்கள்.குரு எங்கு இருக்கிறார் என்று அதிகமாக இருக்கும்.

ஆன்மீக குருவை தேடிச்செல்லும்பொழுது உங்களின் ஜாதகத்தில் குரு நன்றாக இருந்து தசா நடத்தும்பொழுது நல்ல குருவை நீங்கள் அடையாளம் கண்டுக்கொள்ளலாம் அவரும் உங்களுக்கு கிடைப்பார். உங்களின் ஜாதகத்தில் குரு கெட்டு இருந்து தசா நடத்தும்பொழுது ஏதாவது ஒரு பொய்யான குருவிடம் சென்று விடுவீர்கள். 

இன்றைய காலத்தில் பொய்யானவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் குருவை அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள். உங்களின் குரு தசாவை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: