வணக்கம் நண்பர்களே!
புத்தககாட்சியை பார்க்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். நான் புக் எல்லாம் படித்து பல வருடங்கள் சென்றுவிட்டது சரி புத்தக உலகம் எப்படி இருக்கும் என்று பார்த்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது நண்பர் தமிழ்செல்வன் வந்திருந்தார். இவர் எப்பொழுது வந்தாலும் அவரோடு எங்கையாவது ஊர் சுற்று செல்வது உண்டு.
இவரோடு புத்தககாட்சியை பார்த்துவிடலாம் என்று நினைத்து சார் வாங்க புத்தககாட்சியை பார்க்கலாம் என்று சொன்னேன். சரி வாங்க போக என்றார். மதியம் கிளம்பும் நேரத்தில் நண்பர் கிருஷ்ணப்பசரவணன் அவர்களிடம் இருந்து போன் கால் அவர் இந்தியா வந்ததை மறந்துவிட்டேன். இன்னும் 1 மணி நேரத்தில் கிளம்புகிறேன் என்றார். இவரை பார்க்கவேண்டும் என்று ஏர்போர்ட்டிற்க்கு சென்று அவரை சந்தித்துவிட்டு அவரை அனுப்பிவிட்டு நேராக புத்தககாட்சிக்கு சென்றோம்.
புத்தககாட்சிக்கு சென்றால் அப்பொழுது நான் படித்த புத்தகங்கள் தான் பெரும்பாலும் இருந்தன. ஒரு சில புதிய புத்தகங்கள் வந்துள்ளன. இப்பொழுது புத்தகங்கள் படிக்காதர்க்கு காரணம் படித்தால் பெரும்பாலும் தலைவலி வந்துவிடுகிறது.
குருவி்டம் சென்றால் இதுவரை புத்தகத்தில் படித்த அத்தனை விசயங்களையும் மறக்கவேண்டும் என்று தான் முதலில் சொன்னார். தேவையற்ற குப்பைகளை மனதில் வைக்ககூடாது என்று சொன்னார். படித்த விசயங்களை மறக்க மறக்க ஆன்மீகமுன்னேற்றம் ஏற்படும். மனது குழந்தைப்போல் இருக்கவேண்டும் என்பார்.ஆத்மாவின் பலனே அனைத்தையும் இழப்பதால் மட்டுமே ஏற்படுகிறது.
எதுவும் அற்ற நிலையில் ஆத்மா தன்னை பலப்படுத்துகிறது எனக்கு நடக்கும் ஒரு செயல். ஒரு சிலர் படித்து படித்து முன்னேற்றம் காண்பார்கள். ஒரு சிலர் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற்றம் காண்பார்கள். எங்களை பொருத்தவரை ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் ஏட்டில் உள்ள விசயங்கள் எங்களின் ஆன்மீகத்திற்க்கு உதவாது. புத்தகாட்சியை பார்த்துவிட்டு இரவு எட்டு மணி போல் திரும்பிவிட்டேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment