வணக்கம் நண்பர்களே!
ஒரு தகவலைப்பற்றி பார்க்கலாம். பொதுவாக இறப்பிற்க்கு சனி காரத்துவம் வகிக்கிறார். சனிக்கிரகம் குளிர்ச்சியான கிரகம் என்பதால் வயதான பிறகு இறப்பவர்களுக்கு சளி தொந்தரவு இருக்கும். அதிகமான சளி தொந்தரவாலேயே அவர்கள் இறப்பதும் உண்டு.
ஒரு சில கிராமங்களில் பார்த்தால் அவர்களின் வீட்டில் உள்ள மூதாட்டிகளுக்கு அவர்கள் தெரியாமல் எண்ணை தேய்த்து குளிப்பாட்டி விட்டுவிடுவார்கள் அது என்ன என்றால் சளிபிடித்து அதனாலேயே இறப்பதும் உண்டு. அதனை சனி பிறந்துவிட்டது என்பார்கள். நம்ம ஆளுங்க எப்படிப்பட்ட கில்லாடிகள் எண்ணையும் தேய்த்துவிட்டு கூடுதலாக இளநீரையும் கொடுத்துவிடுவார்கள்.உடனே அவர்களுக்கு பிரச்சினையாகி இறப்பதும் உண்டு.
நான் சொல்லுவது எல்லாம் அவர்களுக்கு தெரியாமல் செய்துவிடுகிறார்கள். பல கிராமங்களில் இருந்து நமது பதிவை படிக்கும் நண்பர்கள் இருக்கின்றனர் அவர்கள் இப்படி செய்யாமல் இருக்கட்டும் என்றும் தான் இதனை சொல்லுகிறேன்.
சளிக்கும் மரணத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. சளியை நாம் சனி என்றே சொல்லலாம். உங்களின் ஊரில் யாராது உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்களை பார்த்தால் அவர்கள் கடைசி நேரத்தில் சளி தான் இழுத்துக்கொண்டிருக்கும்.சளி இழுப்பது தான் சத்தமாக இருக்கும்.
மரணத்தைப்பற்றி பல விசயங்கள் இருந்தாலும் இந்த சளி என்ற சனியின் தொல்லை அதிகமாக இருக்கும்.மரணத்தைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்தது உண்டு அதனை எல்லாம் அவ்வப்பொழுது உங்களுக்கு தருகிறேன். ஏன் என்றால் எல்லாவற்றையும் கொட்டினால் நீங்கள் பயந்துவிடுவீர்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment