Followers

Wednesday, January 8, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    இன்று காலையில் ஒரு நண்பர் என்னை சந்திக்க வந்தார். அவரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு அவர் என்னுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு மதியம் சென்றார். அவரின் ஜாதகத்தை பார்த்தால் தொடர்ச்சியாக ஆறாவது வீட்டு உள்ள கிரகங்களின் தசாவாகவே இருக்கின்றது. கிட்டதட்ட இன்னும் முப்பது வருடங்களுக்கு மேல் இருக்கின்றது.

கடவுள் ஒரு சிலருக்கு இப்படி தான் பலபரிட்சையை வைத்துவிடுவார். ஒருவருக்கு தசா நடைபெறும்பொழுது அந்த தசா மாற்றி மாற்றி வீடுகளின் தன்மையை கொடுக்கும்பொழுது மட்டுமே ஒரு மனிதனுக்கு நல்ல நிலைக்கு வருவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும்.

ஆறாவது வீட்டில் மூன்று கிரகங்கள் இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிற்க்கும் காரத்துவம் வகித்தாலும் மூன்றும் அமரும் வீடு ஒரே வீடாகவே இருக்கின்றது பலனும் குறைவாக தான் கொடுக்கும்.

பிரம்மன் விதியை இப்படி எழுதி இருந்தாலும் ஏதோ ஒன்று நமக்கு கிடைக்கும் என்று தான் அந்த நண்பர் என்னை நாடி வந்தார். பல விசயங்களை அவருக்கு சொல்லி இப்படி எல்லாம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

ஒரு சிலவிசயங்கள் என்னால் எழுதமுடியாது என்னை தனியாக வந்து சந்திக்கும்பொழுது மட்டுமே சம்பந்தப்பட்ட நபருக்கு புரியவைக்கமுடியும்.சென்னையில் இருக்கும் நபர்கள் தயவு செய்து நேரில் வந்து கேட்டு தெரிந்துக்கொள்வது நலம்.

ஆறாவது வீட்டு தசாவைப்பற்றி பல விசயங்களை நான் எழுதியுள்ளேன். வந்த நபருக்கு தொடர்ச்சியாக ஆறாவது வீட்டு தசா நடந்தாலும் அதில் இருந்து நீங்கள் தப்பமுடியும் என்பதை சொல்லி செய்ய சொல்லி அனுப்பிவைத்தேன். உங்களுக்கும் இப்படி எல்லாம் கிரகங்கள் பிரச்சினையை கொடுத்தக்கொண்டிருந்தாலும் ஒரு சில வழிகள் இருக்கின்றது அதனை தெரிந்துக்கொள்ள நேரில் வாருங்கள்.

நண்பர்களே பொதுவாக அனுபவத்தில் இருந்து எழுதுவதால் சந்திக்கும் நபர்களின் பிரச்சினை மையப்படுத்தி எழுதுகிறேன். சம்பந்தப்பட்ட நபர் என்பது யாருக்கும் தெரியாது. உங்களின் ஜாதகத்தையும் வெளியிடப்படாது. இதனைப்பற்றி எழுதாதீர்கள் என்று சொன்னால் கண்டிப்பாக அதனைப்பற்றி எழுதமாட்டேன். 

வரும்பொழுது வாடிக்கையாளராக வருவீர்கள் செல்லும்பொழுது நண்பர்களாக மாறிவிடுவீர்கள். எந்த இடத்திலும் கிடைக்காத ஒரு அனுபவத்தை நீங்கள் பெறமுடியும் என்பது என்னை சந்தித்தபிறகு உங்களுக்கு கண்டிப்பாக புரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: