Followers

Sunday, January 19, 2014

குரு தசா பலன்கள் பகுதி 77


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாப்பலனில் சந்திரபுத்தியைப்பற்றி பார்க்கலாம். குருவும் சந்திரனும் சம்பந்தப்படும்பொழுது நடக்கும் ஜாதகருக்கு நிறைந்த செல்வவளத்தை கண்டிப்பாக தரும் என்பதில் சந்தேகமே கிடையாது. அவர்கள் எதிர்பார்த்த செல்வவளம் வரும்.

ஏழையாகவே இருப்பவனுக்கு சிறிய தொகை கையில் கிடைத்தாலே மிகப்பெரிய விசயம் அல்லவா. அதுவே அவனை பல மடங்கு மகிழ்ச்சியில் இருக்கசெய்யும். பல நண்பர்கள் கூட என்னிடம் சொல்லுவார்கள் ஏன் சார் பணம் பணம் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு எல்லாம் நான் சொல்லும் காரணம் பணம் இல்லாதவனுக்கு பணத்தை சிறிது கொடுத்தால் அவன் மகிழ்ச்சியில் இருப்பான். 

உங்களிடம பணம் இல்லை என்றால் உங்களின் வாழ்நாள் குறைகிறது என்று அர்த்தம். நீண்ட ஆயுளுக்கு எந்த கிரகம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுவேன். அப்படி குரு கிரகம் நன்றாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு பணம் நன்றாக வரும். அதனை வைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை நீங்கள் வாழலாம். 

குருவும் சந்திரனும் இணைந்து தசா நடத்தும்பொழுது உங்களுக்கு எப்படியும் ஒரு நல்ல தொகை கொடுத்துவிட்டு தான் செல்வார். இந்த புத்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் புத்தி. 

குரு தசா சந்திர புத்தியின் காலம் 1 வருடம் 4 மாதங்கள் ஆகும்.

அந்தரநாதர்கள்

சந்திரன்    1 மாதம் 10 நாள் 
செவ்வாய்  0 மாதம் 28 நாள்
ராகு       2 மாதம் 12 நாள்
குரு       2 மாதம்  4 நாள்
சனி       2 மாதம்  16 நாள்
புதன்      2 மாதம்   8 நாள்
கேது      0 மாதம்   28 நாள்
சுக்கிரன்    2 மாதம் 20 நாள்
சூரியன்     0 மாதம் 24 நாள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: