Followers

Friday, January 31, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!

கேள்வி
                      அருள்மணி:  சார் உங்களை நம்பி தானே வருகிறோம் ஏன் சோதனை செய்கிறீர்கள் ?நீங்களே இப்படி செய்யலாமா?

பதில்

வணக்கம் நண்பரே நான் என்ன செய்வது ஒரு மனிதனை ஒரே பார்வையில் பார்த்து தெரிந்துக்கொண்டாலும் அவர்களின் கர்மாவின் கணக்கை சரிசெய்ய இப்படி செய்வது உண்டு. மனிதர்கள் என்பவர்கள் தன் வேலை முடிந்து விட்டால் எட்டி உதைப்பார்கள் என்று தெரியும்.  இதனை வெளியில் இருந்து பார்க்கும்பொழுது திமிர் பிடித்தவர்கள் என்று தோன்றும் ஆனால் உள்ளுக்குள் இப்படி செய்தால் தானே அவர்கள் திருந்துகிறார்கள்.

இப்படி செய்யும்பொழுது அவர்களுக்கு ஒன்று விளங்கும் நாம் ஏன் இப்படி இவர்களை போல் மாறக்கூடாது என்று நினைப்பார்கள். அல்லது இனிமேல் எந்த தவறும் செய்யகூடாது என்று நினைக்கதோன்றும். எந்த ஒரு காரணமும் இல்லாமல் இப்படி செய்வது கிடையாது அனைத்திற்க்கும் காரணம் இருக்கின்றது. 

எங்களை ஒட்டிக்கொண்டு தான் வாழவேண்டும் என்று நாங்கள் நினைப்பதில்லை. எங்களிடம் யாராவது எதையாவது பேசினால் நாங்கள் சொல்லுவது எங்களின் வயிற்றுவலிக்கு நாங்கள் உங்களை தேடிவரவில்லை உங்களின் வயிற்றுவலிக்கு நீங்கள் தான் எங்களை தேடி வந்தீர்கள் என்று சொல்லுவது உண்டு.

நான் அனைவரிடமும் நாகரீகமாக நடந்துக்கொள்வேன். ஒரு சில சாமியார்கள் நாகரீகம் என்றால் என்ன என்று கேட்பார்கள். கெட்டவார்த்தையால் கூட திட்டுவார்கள். பொதுவாக எந்த ஆன்மீகவாதியும் யாரையும் தேடிபோவதில்லை மக்கள் தான் தேடி போவார்கள்.

ஒரு சில சாமியார்களை நான் பார்த்திருக்கிறேன் பயங்கர கோபம் வரும். அது அவர்களின் குணம். தனிமையிலேயே இருப்பவர்கள் அதனால் கூட கோபம் வரச்செய்யும். நமக்கு வேலை நடக்கவேண்டும் என்றால் சகித்துக்கொள்ளதான் வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: