Followers

Thursday, January 2, 2014

குரு தசா பலன்கள் பகுதி 69


வணக்கம் நண்பர்களே !
                    குரு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம் அதில் சுக்கிரபுத்தியை நாம் பார்க்கலாம்.

லக்கினத்தில் சுக்கிரன் அமர்ந்து தன்புத்தியை நடத்தினால் குருவும் சுககிரனும் சேர்ந்து இருக்கிறது அல்லவா. ஒன்று கொடுத்தால் ஒனறு எடுக்கும் இருந்தாலும் லக்கினத்தில் இருந்து நடத்துவதால் மிக அழகாக நீங்கள் தெரிவீர்கள். உடலில் ஒருவித கவர்ச்சி என்பது தெரியும். அதிகமாக துணைவர் வழியில் சந்தோஷம் கி்டைக்கும். 

லக்கினத்தில் இருந்து இருகிரகங்களும் ஏழாவது வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாடு நடைபெறும் ஆனால் இந்த நபரை தான் தேர்ந்தெடுக்கலாம் என்ற ஒரு சண்டையும் நிழவும். ஜாக்கிரதையாக இருக்கவும்.

குரு திருமணத்தை கொடுத்தாலும் களத்திரகாரர் ஒரு சண்டையை ஏற்படுத்திவிடுவார்.இந்த விசயத்தில் நிதானமாக இருந்து தேர்வு செய்வது நல்லது. அடுத்ததாக உங்களோடு பல பெண்கள் தொடர்புக்கொள்வார்கள். ஆண்களாக இருந்தால் பெண்கள் தொடர்பு இருக்கும. பெண்களாக இருந்தால் ஆண்கள் தொடர்பு இருக்கும்.

உங்களுக்கு புதிய தொழில்வாய்ப்பும் எதிர்பால் இனத்தோடு ஏற்படும். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளமுடியும். உங்களின் வளர்ச்சி அதிகமாக துணைவர்களின் ஒத்துழைப்போடு இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: