Followers

Saturday, January 18, 2014

கேள்வி & பதில்


Swami said...
ஒரு ஆன்மீகவாதி இறைச்சி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், புலால் சாப்பிடாதவர்கள் எல்லாம் மகான்களும் இல்லை.இன துவேஷம் கொண்டு மக்களை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு சைவ உணவாளர். ஆனால், ஒரு உயிர் கொல்லப்படும் போது, அதன் உடலில் ஏற்படும் இரசாயன மாற்றம், பயத்தால் துடிக்கும் போது ,அதன் இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள், நாம் அதை உட்கொள்ளும்போது, நாம் உடலிலும் பரவுகிறது. அது நுண்ணியமாக நாம் சுக்ஷ்மா உடலை தாக்குகிறது. 

நான் புலால் உண்கிறேன் என்று சொல்லும் உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது. ஆனால், இறைச்சி உண்ணுவதை விட்டு ஒழித்தால், நீங்கள் இப்போது இருக்கும் நிலயை விட மிக சிறந்த நிலயை அடைவீர்கள் என்பது சத்யம்.

பதில் 

வணக்கம் நண்பரே என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பலபேரை நான் நேரில் தரிசனம் செய்திருக்கிறேன். அவர்களில் ஒரு சிலர் அசைவம் சாப்பிடுபவர்களாக இருக்கின்றனர். மிக உயர்ந்த நிலையில் இருந்துக்கொண்டு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். அசைவம் சூட்சம உடலை தாக்குகிறது என்றால் எப்படி இவர்கள் அந்த நிலையை அடைந்திருக்கமுடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

அசைவத்தை விட்டுவிட்டால் மிக உயர்ந்த நிலையை அடையலாம் என்று சொல்லியுள்ளீர்கள்.

எந்த ஒரு காரியத்திற்க்கும் முதல் நிலையை அடைவது மட்டுமே கடினமாக இருக்கும் அதன் பிறகு வெகு எளிதாக எந்த நிலையை அடையமுடியும். 

ஆன்மீகத்தில் ஒவ்வொரு நிலையும் அடைய நமக்கு குரு தான் வழிகாட்டுகிறார்கள். எனது குரு எனக்கு கட்டுபாடு விதிக்கவில்லை எந்த நிலையும் இப்பொழுது இருக்கும் நிலையில் இருந்து அடைய குரு வழிகாட்டுவார்.

அனுபவத்தில் சொல்லவேண்டும் என்றால் நான் நிறைய பயிற்சியை செய்கிறேன். சாதாரண ஆன்மீகவாதியால் செய்யமுடியாத பல வேலைகளை நான் செய்கிறேன் அது எல்லாம் ஒரு ஐந்து நிமிடத்தில் எனக்கு எளிதில் வசப்பட்டுவிடுகிறது. ஒன்றும் தடைஏற்படுவது இல்லை அனைத்தும் குருவைப்பொருத்து அமையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: