வணக்கம் நண்பர்களே!
கோச்சாரப்பலன்களில் சூரியனை எல்லாம் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை ஆனால் இது செய்யும் வேலை அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஒரு ஆண்டில் ஒரு மாதம் மட்டும் பணம் கஷ்டம் ஏற்படும். ஒரு சிலருக்கு ஒரு மாதம் மட்டும் நோய் வந்து படுத்தி எடுத்துவிடும். இதனை எல்லாம் பார்த்தால் அவர்கள் வாழ்நாளில் சரியாக அந்த மாதத்தில் இப்பிரச்சினை சந்திப்பார்கள். இதற்கு காரணம் வகிப்பது சூரியன் கிரகம்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியும் இது கடக்கும்பொழுது அவர்களுக்கு நல்லதை மற்றும் தீயவையும் தரும் அந்த வகையில் ஒருவருக்கு மார்கழியில் பிரச்சினை தரும் என்று இருந்தால் சரியாக அந்த மாதத்தில் பிரச்சினை ஏற்படும். பல பேருக்கு இது நடந்துள்ளது.
என்னுடைய வாடிக்கையாளர் ஒருவருக்கு கம்பெனியில் ஒரு சிறிய பிரச்சினை. அவருக்கு கடன் கொடுத்தவர் பிரச்சினை கொடுக்கிறார என்றார் சரி என்று அவரின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் ஆறாவது வீட்டுக்குடைய சூரியன் கோச்சாரப்பலன் படி பத்தாவது வீட்டில் நிற்கிறது. அதனால் பிரச்சினை கொடுக்கிறது என்று கண்டுபிடித்தேன்.
கோச்சாரப்பலனில் அனைத்து கிரகத்தையும் கவனிப்பது நல்லது. இல்லை என்றால் தேவையற்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்டு தவிக்கவேண்டும். இந்த கிரகம் எல்லாம் பிரச்சினை கொடுக்குமா என்று நினைக்கும் கிரகம் கூட பிரச்சினை தரும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment