Followers

Friday, January 3, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 4


வணக்கம் நண்பர்களே!
                    ஜாதகத்தை எடுக்காமலேயே சில கருத்துக்களை சொல்லுகிறேன் அந்த கருத்துக்களை நீங்களே புரிந்துக்கொண்டு செயல்புரியமுடியும்.

மனிதனுக்கு இரண்டு வாழ்வு தான் ஒன்று திருமணம் செய்யாமல் இருந்துக்கொண்டு பிரம்மசரியும் போல் வாழ்வது துறவியாக மாறுவது அடுத்தது திருமணம் நடைபெற்று இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்வது. மனிதன் இந்த இரண்டு வாழ்க்கை மட்டுமே தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான்.

உங்களுக்கு திருமணம் நடைபெற்று விட்டது நன்றாக சென்றுக்கொண்டிருக்கிறது ஒன்றும் பிரச்சினை இல்லை என்றால் ஜாதகத்தை கையில் எடுக்கவேண்டியதில்லை. ஏதாவது பிரச்சினை என்று வரும்பொழுது மட்டும் ஒரு சில வேலைகளை எதிர்க்கொள்ளவேண்டிவரும்

அனைவருக்கும் பொதுவான தகவல் கீழே

உலகத்தில் நமக்கு மிகப்பெரிய ஆசானாக இருப்பது நமது பெற்றோர்களே அவர்கள் வாழ்ந்து காட்டும் பாடம் நம்மீது மிகுந்து பிரதிபலிக்கும். ஒரு பெற்றோர்கள் நன்றாக வாழ்ந்தார்கள் என்றால் நாமும் நன்றாக வாழமுடியும். நமது பெற்றோர்கள் நன்றாக வாழவில்லை என்றால் நம்மாலும் நன்றாக வாழமுடியாது. இது ஒரு எதர்த்தமான ஒரு கருத்து. 

உங்களின் பெற்றோர்கள் நன்றாக வாழவேண்டும் என்றால் பணம் சொத்துகளோடு அல்ல. நல்ல பாசத்தோடு நேசத்தோடு வாழ வேண்டும். ஒரு சில பெற்றோர்கள் நிறைய பணம் வைத்திருப்பார்கள் ஆனால் அவர்கள் நன்றாக வாழமாட்டார்கள். நாள் முழுவதும் சண்டை சச்சரவு தான் அதிகமாக இருக்கும்.இது நன்றாக வாழும் வாழ்க்கை கிடையாது. இருப்பதை வைத்துக்கொண்டு குறையிலும் நிறையோடு வாழ்ந்தார்கள் என்றால் அது அவர்கள் வாழ்ந்த வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

கணவன் மனைவிக்குள் சச்சரவு என்று வரும்பொழுது இருவரும் சண்டை போடுவதற்க்கு மட்டுமே நேரம் இருக்கும். வேறு வேலைக்கு நேரம் இருக்காது. வேறு வேலை என்றால் என்ன நமக்கு புண்ணியம் என்ற ஒன்றை தேடி வைக்கவேண்டும் அல்லவா. நமக்கு சொத்து எல்லாம் சேர்க்கவேண்டியதில்லை. ஏதோ ஒரு கம்பெனியில் நீங்கள் வேலை பார்த்தாலே போதும் ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை வசதியில் இருந்து கொஞ்சம் ஆடம்பர வசதிவரை நீங்களே பெற்றுவிடுவீர்கள். புண்ணியம் சேர்த்தால் மட்டுமே நீங்களும் உங்களின் துணைவரும் நலமுடன் வாழமுடியும்.

பெற்றோர்கள் சொத்து சேர்ப்பதை விட புண்ணியத்தை சேர்ப்பது மேல். இருவரும் சண்டை போட்டால் அவர்களின் பிரச்சினை தான் முக்கியம் என்பதை தவிர பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விகுறி மட்டுமே.

ஒரு சில பெற்றோர்கள் ஏழ்மையில் வாழ்ந்தாலும் சரியான வழிப்பாட்டு முறையை பின்பற்றி வருவார்கள் அவர்களால் முடிந்த உதவியை செய்வார்கள் அவர்களின் குழந்தைகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.

ஒரு சில பெற்றோர்கள் என்ன தான் பணம் வைத்திருந்தாலும் அவர்கள் நல்லதை செய்யாமல் அவர்களின் குழந்தைகளின் அழிவுக்கு அவர்களே காரணமாகவும் இருக்கின்றனர்.

ஏப்பா இது எல்லாம் சோதிடத்தை சொல்லுபா என்று நினைப்பது புரிகிறது அடுத்த பதில் சொல்லுகிறேன் அப்பொழுது உங்களுக்கு புரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: