வணக்கம் நண்பர்களே!
இன்று ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பேசினார் அவர் பேசும்பொழுது கும்ப லக்கின பெண்ணை எதனையும் பார்க்காமல் திருமணம் செய்துக்கொள்ளலாமே சார். அது உண்மையா என்று கேட்டார்.
ஒருவருக்கு திருமணத்தை தருவது லக்கினம் கிடையாது. அவர்களின் களத்திர ஸ்தானம் தான் முக்கியம். குமப லக்கினமாக இருந்தாலும் அவர்களின் களத்திரஸ்தானம் பாதிப்படையும்பொழுது தாலியை கழட்டி கையில் கொடுத்துவிடும்.
கும்பலக்கினம் என்பதற்க்காக விடாது. பொதுவாக பெண்களுக்கு களத்திரகாரகன் மற்றும் எட்டாவது வீட்டு அதிபதி இந்த இரண்டு வீடாவது நன்றாக இருக்கவேண்டும். இந்த இரண்டு வீட்டில் ஒரு வீடு பாதிப்படைந்தாலும் சிக்கல் வந்துவிடும். திருமணவாழ்க்கைக்கு பிறகு அவர்களின் குழந்தையைப்பற்றி தான் கேள்வி வரும். குழந்தை காட்டக்கூடிய வீடான ஐந்தாவது வீடும் முக்கியப்படுகிறது.
ஐந்தாவது வீடு கெடும்பொழுது குழந்தைபாக்கியம் இருக்காது. வேறு கிரகங்கள் தயவு செய்தாலும் குழந்தை பிறப்பதற்க்கு காலம் சென்றுவிடும். இந்த மூன்று வீடும் நன்றாக இருந்தால் ஒரு பெண் ஒரளவாவது வாழ்ந்துவிடலாம். அதன் பிறகு தான் ஒவ்வொரு வீட்டையும் நாம் பார்க்கவேண்டும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினம் மட்டும் தான் பெரிது என்று பார்த்துக்கொண்டு திருமணத்தை நடத்தகூடாது அனைத்து வீட்டையும் நன்றாக கவனித்து திருமணத்தை நடத்தவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment