Followers

Wednesday, January 8, 2014

கேள்வி & பதில்


கேள்வி
surya said...
வர வர சுய புராணம் அதிகமா இருக்கே பாஸ், என்ன காரணம்? நீங்க கடவுளோட கருவியா, இல்லே நீங்க தான் கடவுளா?

பதில்
வணக்கம் நண்பரே மனம் திறந்து சொன்னதற்க்கு நன்றி. எப்பொழுதும் நான் மனிதன் தான். யாருமே பயிற்சியை பற்றி வெளியில் சொல்லுவது கிடையாது அங்கு என்ன நடக்கிறது என்ன செய்கிறார்கள் என்பதை யாரும் வெளியில் சொல்வது கிடையாது. எந்த ஒரு மகான்களையும் ஒரு குறிப்பிட்ட காலம் என்ன செய்துக்கொண்டிருந்தார்கள் என்பது வெளியில் சொல்லுவது கிடையாது. 

அந்த காலங்களில் தன்னை தயார்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் என்ன என்ன செய்தார்கள் என்பதை வெளியில் சொல்லுவதில்லை. நான் மகான் கிடையாது. ஒரு சில பயிற்சிகளை செய்வதற்க்காக அப்படி சென்றது உண்டு. அதனைப்பற்றி கொஞ்சம் வெளியில் சொல்லும்பொழுது இப்படி செல்பவர்களுக்கு இது எல்லாம் உதவும் என்ற நம்பிக்கையில் சொல்லுகிறேன்.

பிரச்சினையும் தீர்வும் பகுதியில் சொல்லும்பொழுது என்னைப்பற்றி சொல்லிருந்தேன் அதனை சொல்லுவதற்க்கு காரணம் நம்மை போல் ஒருவன் தன்னை தயார்படுத்திக்கொள்ள இப்படி எல்லாம் செய்திருக்கிறான் இப்படி நானும் முன்னேற்றம் அடையலாம் என்று பல பேர் இதனை நோக்கி செல்வார்கள் என்பதால் சொன்னேன்.

எங்கும் கடவுள் நிறைந்திருந்தாலும் சம்பந்தப்பட்ட நபரை நாம் பார்க்குமபொழுது மட்டுமே நமக்கு நல்லது நடக்கும். அதற்கு காரணம் அதிகமான சக்தியை தன்னுள் வைத்திருக்கிறார்கள். அந்த சக்தி பார்க்கும் நபர்களுக்கு கிடைக்கிறது.

கடவுள் மகிழ்ச்சியானவர் அன்பானவர் கருணையானவர் என்று அனைத்து மதத்திலும் சொல்லுவார்கள். ஒரு சிலருக்கு மனைவியை பார்த்தால் மகிழ்ச்சி ஏற்படும். மனைவி கடவுள் கிடையாது ஆனாலும் மனைவி பார்க்கும்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் கண்டிப்பாக மனைவியை பார்த்து தான் ஆகவேண்டும்.  மகிழ்ச்சியை தருவது மனைவியாக இருக்கின்றது அவ்வளவு தான். கடவுள் மகிழ்ச்சியை உங்களின் மனைவி வழியாக கொடுக்கிறார் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

இவர் வழியாக உங்களுக்கு சொல்லுவது எல்லாம் என்னை பார்க்காதீர்கள் சொல்லுகின்ற விசயங்களை பாருங்கள். என் மீது எதிர்பார்ப்பு இருக்கும்பொழுது உங்களுக்கு சொல்லுகின்ற கருத்து எடுபடாமல் போகும். திறந்த மனதோடு வருகின்ற கருத்துக்களை எடுங்கள். கருத்து சொல்லுபவனை பார்க்ககூடாது. 

என்னை நீங்கள் மனதில் நிலைநிறுத்தகூடாது. வரும் விசயங்களை நம்மால் செயல்படுத்தமுடியுமா என்பதை மட்டுமே பார்க்கவேண்டும். செயல்படுத்தினால் நல்லது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: