Followers

Sunday, January 19, 2014

குலதெய்வமும் உணவுமுறையும்


ணக்கம் ண்பர்களே!
                    நான் பல பதிவுகளில் அசைவத்தை பற்றி சொல்லி உள்ளேன். இதனை எல்லாம் சொல்லுவதற்க்கு காரணம் ஒன்று இருக்கின்றது. நமது உணவு முறை என்று மாறுகிறதோ அன்றே நமது தெய்வவாழ்வும் மாறுவிடும் என்பதில் நான் அசைக்கமுடியாத கருத்தை வைப்பவன். 

குலதெய்வத்தை என்று மனிதன் மறக்க ஆரம்பித்தானோ அன்றே அவன் தனது பண்பாட்டை மறக்க ஆரம்பித்துவிட்டான் என்று அர்த்தம். தன் நிலத்தில் என்ன விளைகிறதோ அதனை எடுத்து சமைத்து தன் கடவுளுக்கு படைத்துவிட்டு தானும் உண்டு எந்த வித நோயும் இல்லாமல் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டான்.

ஒரு மனிதனை படைக்கும்பொழுதே அந்த நாட்டிற்க்கு தகுந்தார்போல் தான் இறைவன் படைக்கிறார். அந்த நாட்டில் என்ன் விளைகிறதோ அதனை உண்டு அவன் வாழ்ந்தால் அவனுக்கு நோய் என்பது வரவே வராது. இன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் கூட வெளிநாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

வேறு உணவுகளை நீங்கள் சாப்பிடும்பொழுது உங்களின் உடல் தன்மை மாறிவிடும். உடல் தன்மை மாறினால் உங்களின் மனதின் தன்மையும் மாறிவிடும் அப்புறம் பிரச்சினை மட்டுமே உங்களின் வாழ்க்கையாக இருக்கும்.

நீங்கள் சாப்பிடும் உணவு உங்களின் தெய்வங்களுக்கு வைத்து படைக்கிறீர்களா என்று பாருங்கள் அப்படி வைத்து படைத்தால் அந்த உணவை நீங்கள் தாராளமாக சாப்பிடலாம். இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டு உணவகங்களில் தயாராகும் உணவையா உங்களின் குலதெய்வத்திற்க்கு படைக்கிறீர்கள். கிடையாது அப்படி இருக்கும்பொழுது நீங்கள் மட்டும் ஏன் வெளிநாட்டு உணவுகளை விரும்பி சாப்பிடுகிறீர்கள். உங்களின் தெய்வத்திற்க்கு என்ன படைக்கிறீர்களோ அதனையே நீங்கள் சாப்பிடவேண்டும்.

பொதுவாக இறைவனுக்கு படைக்கும் உணவுகள் இயற்கை முறையிலேயே இருக்கவேண்டும் என்று பார்த்து தயார் செய்து படையல் செய்வார்கள் அப்படி நீங்களும் தயார் செய்து சாப்பிட்டால் உங்களுக்கும் ஒன்றும் செய்யாது. நீங்களும் தெய்வத்தோடு சேர்ந்து வாழமுடியும்.

நீங்கள் உணவு முறையை மாற்றிவிட்டு நான் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையபோகிறேன் என்று பயிற்சி செய்தால் ஒன்றும் நடைபெறாது. சிக்கன் சாப்பிட்டாலும் வீட்டில் எப்படி தயார் செய்வார்களோ அப்படி சாப்பிட்டுவிட்டு நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தால் நீங்கள் ஆன்மீகவாதியாக இருக்கலாம்.சிக்கனை கண்ட கண்ட மசாலா போட்டு தயார் செய்து சாப்பிட்டுவிட்டு ஆன்மீகத்தில் இருந்தால் ஆன்மீகவாழ்வு உங்களுக்கு வராது.

உங்களின் ஊரில் விளையும் பொருட்களை வைத்து சமையல் செய்து சாப்பிட்டால் நீங்கள் ஆன்மீகவாழ்வு வாழமுடியும். நன்றாக கவனித்து பார்த்தால் உங்களின் தெய்வத்திற்க்கு எதனை படையலாக படைக்கிறீர்களோ அது தான் உங்களின் உணவு.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

அம்பாளடியாள் said...

வணக்கம் !
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் .இன்று தான் தங்களின் தளத்தில் இணைந்துகொண்டேன் பல பயனுள்ள சிறப்பான தகவல்கள் இங்கும்
இருப்பதாக நான் உணர்கின்றேன் .சந்தர்பம் கிடைக்கும் பொழுதுகளில்
தொடர்ந்தும் தங்களின் ஆக்கங்களைக் கண்டு மகிழ்வேன் .மிக்க நன்றி
பகிர்வுகளுக்கு .