வணக்கம் நண்பர்களே!
நேற்று ஆன்மீக அனுபவங்களின் பதிவை படித்துவிட்டு நிறைய நண்பர்கள் நாங்கள் இனிமேல் அசைவ உணவை சாப்பிடுகிறோம் என்று சொன்னார்கள்.
முதலில் ஒன்றை புரியவைப்பதற்க்கு தான் இதனை எழுதினேன் நண்பர்களே. அசைவம் சாப்பிட்டால் ஆன்மீகம் வராது என்பதை உடைக்கவேண்டும் என்பதற்க்காக எழுதியபதிவு தான் அது. அதே நேரத்தில் ஒரு ஆன்மீகவாதி அனைத்தையும் சகித்துக்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காகவும் சொன்னேன். அசைவம் சாப்பிடுகிறவனை பார்த்தால் சைவம் சாப்பிடுபவர்கள் ஏதோ இவர்கள் மனிதர்களே இல்லை என்பது போல் பார்ப்பதை தவிர்க்கவேண்டும் என்பதற்க்காகவும் சொன்னேன்.
அசைவம் சாப்பிடுவது தப்பில்லை சாப்பிட்டால் அந்த உணவில் இருந்து கிடைக்கும் சக்தியை நீங்கள் செலவு செய்ய நீங்கள் கண்டிப்பாக கடுமையான வேலை செய்யவேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்யவேண்டும் அப்படி இல்லை என்றால் உங்களின் உடல் உங்களுக்கு சவாலாக மாறிவிடும். அப்புறம் நோயில் விழுந்துவிடுவீர்கள். அதற்கு நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
உணவகங்களில் வாங்கி சாப்பிடாதீர்கள். உங்களின் வீட்டில் தயார் செய்து சாப்பிடுங்கள். நான் அசைவம் சாப்பிட்டாலும் வீட்டில் தான் சாப்பிடுவேன். அதுவும் கடல் மீன் சாப்பிடுவேன். அதுவும் மாதத்திற்க்கு ஒரு முறை சாப்பிடுவதே அதிகம். சைவம் சாப்பிடுபவர்களை உடன் வைத்து சாப்பிடகூடாது அது பாவம்.
என்னை சந்திக்க வருபவர்களை கண்டிப்பாக சாப்பிடாமல் அனுப்பமாட்டேன். அவர்கள் வேண்டாம் என்று சொன்னால் ஒரு ஜீஸ் வாங்கிக்கொடுப்பது வழக்கம். தமிழர்களின் பண்பாட்டை இதில் மட்டும் கடைபிடிப்பது உண்டு. சாப்பிடபோனால் அது சைவசாப்பாடாக தான் இருக்கும்.
உடற்பயிற்சி அதிகம் செய்பவன். விடியற்காலையில் எழுவது எனக்கு பிடித்தமான ஒன்று. இதனை பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால் அசைவம் சாப்பிடலாம்.
எந்த உணவும் ஆன்மீகத்திற்க்கு எதிரி கிடையாது. ஆனால் நாம் எப்படி பயன்படுத்திகிறோம் என்பதில் தான் இருக்கிறது. உங்களிடம் நிறைய சக்தி உருவாகிக்கொண்டே இருக்கும் அதனை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும்.
காமம் கோபம் கூட இப்படிப்பட்டவை எல்லாம் ஒரு நல்லசக்தி தான் அதனை வேறு வழியில் நாம் கொண்டுச்செல்லவேண்டும் அதனை மாற்றம் செய்தால் மிகப்பெரிய அளவில் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள் அப்படி இல்லை என்றால் அழிவு பாதைக்கு இழுத்து சென்றுவிடும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
26. புலால் மறுத்தல்
குறள் 251 தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
பொருள்
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?
புலால் மறுத்தல்
குறள் 252
ஆட்சி போற்றாதார்க்கு இல்லை: அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருள்
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு, அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும் சிறப்பு, புலால் தின்பவர்க்கு இல்லை.
குறள் 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
பொருள்
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகிய அருளைப் போற்றாது
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊண்.
பொருள்
குற்றித்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர் உயிரினடத்திலிருந்து பிரிந்துவந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
பொருள்
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
Post a Comment