Followers

Wednesday, January 29, 2014

பூர்வ புண்ணியம் 67


ணக்கம் ண்பர்களே!
                    கடவுள் மீது ஏன் குறைச்சொல்லவேண்டும் அனைத்திற்க்கும் நாம் தானே காரணம் என்று என் மனது திடீர் என்று கேள்வி கேட்டது. சரி என்று எழுதிவிட்டேன். 

நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் என்னால் தான் ஏற்பட்டது. அது இந்த ஜென்மத்தில் நடந்து இருக்கலாம் அல்லது முன்ஜென்மத்தில் நடந்து இருக்கலாம். நாம் செய்கின்ற அனைத்து செயலையும் கவனிப்பதற்க்கு என்று தனி ஆட்கள் இருக்கின்றார்கள் அவர்கள் கவனித்து நமது கணக்கை எழுதிவிடுகிறார்கள். அந்த கணக்கு நம்மை தொடருகிறது.

இன்றைக்கு நாம் செய்கின்ற செயல் எப்படி இருக்கிறது என்றால் அனைத்தும் பிறர் கெடுவதுபோல் தான் உள்ளது. இதுவே மிகப்பெரிய பாவம். ஒரு பாவம் என்பது உடலால் செய்வதை விட மனதால் செய்யும் பாவம் தான் அதிகமாக இருக்கின்றது. 

நீங்களே பாருங்கள் இன்றைய பேப்பரை எடுத்தால் எங்கேயே ஒரு இடத்தில் ஒரு கொலை நடந்திருக்கலாம் அவ்வளவு தான் ஆனால் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் பிரச்சினை மேல் பிரச்சினை ஏற்படுகிறது. அனைத்து மக்களும் என்ன கொலையா செய்திருப்பார்கள்? அல்லது கற்பழித்து இருப்பார்களா? கிடையாது அனைவரும் மனதால் செய்கின்றனர். மனதால் செய்கின்ற பாவத்தால் தான் பாவம் ஏறிக்கொண்டே இருக்கின்றது.

அதிகமாக உடலால் செய்கின்ற பாவம் என்ன என்றால் ஏதாவது ஏமாற்றுதல் இருக்கும். நண்பர்களை ஏமாற்றுதல் அல்லது காதலியை ஏமாற்றுதல் இப்படி இருக்கும். மனதால் செய்கின்ற பாவம் தான் கர்மாவில் அதிகமாக ஏறுகின்றது.

இன்றைய உலகம் போராட்டமான உலகம் என்று சொல்லுவார்கள் அது தவறு கழுத்தை அறுக்கும் உலகம். இது தான் உண்மை. ஏதாவது ஒரு விதத்தில் நாம் அடுத்தவர்களை கழுத்தை அறுத்துவிடுவோம். இன்றைய காலத்தில் குடும்பத்திற்க்குள்ளேயே கழுத்தை அறுக்கும் வேலை எல்லாம் நடைபெறுகிறது. பின்பு எப்படி கர்மா விலகும்.

பூர்வத்தில் செய்த பாவம் தொடருவதற்க்கும் விலகுவதற்க்கும் உங்களின் கையில் தான் இருக்கின்றது. பாவம் தொடரவேண்டும் என்றால் பாவத்தை செய்துக்கொண்டே இருக்கலாம். பூர்வபுண்ணியத்தில் பாவம் விலகவேண்டும் என்றால் இந்த ஜென்மத்தில் பாவத்தை குறைப்பதற்க்கு என்ன வழி என்று பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: