Followers

Saturday, January 4, 2014

நான் நல்லவனா?


வணக்கம் நண்பர்களே!
                    என்னை சந்தித்து பேசும்பொழுது ஒரு சில நபர்கள் நீங்கள் நல்லவரா என்று கேட்பார்கள். இந்த வார்த்தை ஏன் இவர்கள் கேட்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் அவர் ஏமாற்றுவார்கள் என்று ஒரு சிலர செய்த தவறால் மொத்த ஆன்மீகவாதியும் சந்தேகப்பட வைக்கிறது என்று நினைத்துக்கொள்வேன்.

ஒரு பேண்ட் சர்ட் போட்டவன் தவறு செய்தால் மொத்தமாக பேண்ட்சர்ட் போட்டவர்கள் அனைவரும் தவறு செய்வார்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரு சிலர் செய்யும் தவறு அடுத்தவரை பாதிப்படைய செய்யலாம். அதனால் மொத்தமாக அனைவரையும் தவறானவர்கள் என்று பார்க்ககூடாது.

பொதுவாக யாரிடமும் எதனையும் நான் எதிரபார்ப்பது கிடையாது. அடுத்தவர்களை ஏமாற்றுவதற்க்கு இங்கு வழி இல்லை என்று தான் சொல்லவேண்டும் ஏன் என்றால் எந்த காரியம் செய்தாலும் முதலில் பணம் என்பது பெறப்படுவது இல்லை.அப்புறம் எதற்கு என்னை கண்டு பயம் உங்களுக்கு. நம்பிக்கை தான் வாழ்க்கை.

அடுத்தபடியாக சென்னையில் உங்களுக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்களாக என்று கேட்பார்கள். நான் அனைவரிடமும் எனக்கு சொந்தகாரர்கள் இல்லை என்று சொல்லுவேன். உண்மையில் சொந்தகாரர்கள் இருக்கிறார்கள் அவர்களை ஏன் வீணாக தொந்தரவு செய்யவேண்டும். அதனாலே இல்லை என்று சொல்லிவிடுவது உண்டு.

என்னைப்பற்றி நிறைய தகவல் வேண்டும் என்று நினைப்பவர்கள் நேராக கிளம்பி எனது ஊருக்கு வந்துவிடுங்கள். ஊருக்கு வந்தால் அங்கு எனது வீடு இருக்கின்றது. அங்கு நமது அம்மன் கோவில் இருக்கிறது. என்னை பெற்றவர்களும் அங்கு தான் இருக்கிறார்கள். 

உண்மையில் இவர்கள் எல்லாம் ஏன் இப்படி கேட்கிறார்கள் என்றால் உண்மையான பாசம் வைக்கிறார்கள். அந்த பாசம் ஏமாற்றுதல் அடையகூடாது என்று நினைக்கிறார்கள். பாசம் என்பது உண்மை. கவலையோ படாதீர்கள் பிறர் போல் ஒரு நாளும் இருக்கமாட்டேன். உங்களின் நம்பிக்கை வீண் போகாது.

திருவக்கரை அம்மனை தரிசனம் செய்ய செல்கிறேன். திரும்பி வந்தவுடன் பதிவை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: