Followers

Tuesday, January 7, 2014

பரிகாரம் செய்யும்பொழுது


ணக்கம் ண்பர்களே!
                    பரிகாரம் செய்யும்பொழுது அதிகமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளும் விசயம் என்ன என்றால் அது நீங்கள் அந்த நினைப்பில் இருக்கின்றீர்களா என்று முதலில் பார்க்கவேண்டும். நினைப்பு அதனை விட்டு மாறினால் பரிகாரம் வேலை செய்யாமல் போய்விடும். உங்களின் பணமும் நேரமும் வீணாகபோய்விடும்.

ராகு கேது மற்றும் சனியின் தோஷத்திற்க்கு பரிகாரம் செய்யபோனால் நீங்கள் ஒழுங்காக அங்கு செல்லமுடியாது அவ்வளவு கஷ்டப்பட்டு செல்லவேண்டும். குடும்பத்தினர் உள்ளவர்கள் செல்லும்பொழுது ஒரே வண்டியில் தயவு செய்து செல்லாதீர்கள். நிறைய தடைகள் ஏற்படும். இந்த தடைகளை ஏற்படுத்துவதே இந்த கிரகங்களின் வேலையாக இருக்கும்.

பித்ருதோஷத்திற்க்கு செல்லும்பொழுது அப்பாவை கூட்டிக்கொண்டு செல்லாதீர்கள் அவரே அந்த காரியத்தை தடை செய்துவிடுவார்.அவரை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வது நல்லது.

பரிகாரம் செய்யும்பொழுது பிக்னிக் செல்வது போல் செல்லவேண்டாம் ஏன் என்றால் நமது கர்வை தொலைக்க ஒரு வழியை தேடி தான் செல்லுகிறோம். அதே நேரத்தில் உங்களின் உறவினர்களுக்கும் இதனை தெரியப்படுத்தவேண்டாம். இந்த காலத்தில் உறவினர்கள் தான் நம்மை காலி செய்வது அதனால் அவர்களிடம் சொல்லாமல் செல்வது நல்லது.

நல்ல எண்ணங்களை உடையவர்கள்,ஆன்மீகவாதிகள் அல்லது சோதிடர்களை பரிகார கோவிலுக்கு செல்லும்பொழுது அழைத்துக்கொண்டு செல்லலாம்.அவர்களின் அருளின் ஆற்றலால் கூடுதல் நன்மை நமக்கு நடைபெறும்.

நான் சொல்லும் பரிகாரங்களை செய்ய நினைப்பவர்கள் பரிகாரம் தொடங்கும்பொழுது என்னிடம் சொல்லலாம் உங்களுக்காக எனது பிராத்தனை வைக்கமுடியும் மற்றும் பரிகாரம் முடிந்தவுடன் என்னை தொடர்புக்கொண்டு சொல்லிவிடுவது நல்லது. பரிகாரத்தை செய்துவிட்டு நமது அம்மனிடம் மனம் உருகி வேண்டுதலை வைக்கலாம்.

நம்பிக்கை இல்லாத பரிகாரம் வேலை செய்யாது நம்பிக்கையுடன் செய்யுங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: