Followers

Friday, January 24, 2014

குரு தசா பலன்கள் பகுதி 80


வணக்கம் நண்பர்களே!
                    வெளியூர் இருப்பதால் பதிவு குறைவாக தான் வரும் இருந்தாலும் நேரம் கிடைக்கும்பொழுது எல்லாம் உங்களுக்கு பதிவை தருகிறேன். 

குரு தசா பலன்களை பார்க்கலாம். குரு தசாவில் செவ்வாய் புத்தியைப்பற்றி பார்த்தோம். அதில் ஒரு சில பொதுகருத்துக்களை பார்க்கலாம். குரு கிரகம் நன்றாக இருந்து அதே நேரத்தில் செவ்வாய் கிரகமும் நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுது தான் நாம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். 

செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பு காவல்துறையிலும் கிடைக்கும். வேலை என்பது காவல் காப்பது இல்லாமல் அலுவலக பணிப்போல் அமையும். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு இராணுவ துறையில் வேலை கிடைத்தது.இராணுவதுறையிலும் எழுத்து பணிப்போல் தான் அமைந்தது. 

குருவின் நிலையும் வைத்து தான் பலனை சொல்லவேண்டும். குரு கிரகம் உடலை வருத்தாத வேலையில் தான் செய்ய வைப்பார். மூளை வேலை தான் அதிகமாக இருக்கும்.

செவ்வாய் கிரகம் உடலை வைத்து வேலை வாங்கும் கிரகம் என்றாலும் தசாஅதிபதி என்பவர் குரு கிரகம் அல்லவா அதனால் பலனை அப்படி சொல்லவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: