வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொருவரும் ஆன்மீகத்தைப்பற்றி சொல்லும்பொழுது அதனை பொதுவுடமை போல் சொல்லுவார்கள் ஆனால் எனக்கு அது சுயநலம் போல் தான் இருக்கின்றது.
என்னுடைய தேவைக்காக தான் முதலில் இதனை எல்லாம் எடுத்தேன் அப்ப அது சுயநலம் தானே. சுயநலத்திற்க்காக எடுத்தது பொதுநலமாக மாற்றப்பட்டது. அப்பவும் அதில் இருந்து எனக்கு பணம் வருகிறது. எப்படி பார்த்தாலும் சுயநலமாக தான் இருக்கின்றது.
உங்களின் வீட்டில் சாம்பிராணி மற்றும் ஊதுவத்தி ஏற்றி வணங்கினால் அது ஒரு வசியம் போல் தான் பிரபஞ்சத்தில் இருககும் சக்தி எனக்கு நல்லதை செய்யவேண்டும் என்று உங்களின் சுயநலத்திற்க்காக கேட்கிறீர்கள் என்று அர்த்தம். அப்பொழுது உங்களின் வேண்டுதலை பொருத்து உங்களுக்கு செய்கின்றது.
ஒவ்வொரு ஆன்மீகவாதியும் சுயநலமாக தான் அனைத்தையும் எடுப்பார்கள். எடுத்தை தனக்கு வைத்துக்கொண்டு அதன் வழியாக பிறர்க்கு செய்யமுடியுமா என்று பார்த்து அதனை வைத்து பிறர்க்கு செய்வார்கள். உண்மையில் நான் எடுத்ததும் இப்படி தான் எப்படியும் நமக்கு என்ன என்ன காரியங்களுக்கு இதனை பயன்படுத்தவேண்டும் என்று திட்டம் போட்டு தயார் செய்தேன். அதில் இருந்து ஒரு சதவீதத்தை பிறர்க்கு கொடுக்கிறேன்.
உண்மையை சொல்லுவதற்க்கு எனக்கு என்றைக்கும் தயக்கம் இருந்தது கிடையாது. இன்றைக்கு இருக்கும் சக்தி கூட எனக்கு யார் உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கு தான் அந்த சக்தி செய்யும். பல பேர்கள் எனக்கு பணம் கொடுப்பதற்க்கு காரணமும் அது தான். என் மனதில் மகிழ்ச்சி இருந்தால் அதற்கு காரணமானவர்களுக்கு அந்த சக்தி செய்யும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment