வணக்கம் நண்பர்களே!
எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் ஆனால் மனிதனுக்கு மனிதன் உதவி செய்யுங்கள். உபத்திரம் செய்யவேண்டாம். இந்த காலத்தில் மனிதர்களுக்கு கர்மம் ஏற்படுவது மனதால் செய்யும் பாவத்தால் மட்டுமே இப்படி கர்மம் ஏற்படுகிறது.
இல்லறத்தில் இருப்பவர்கள் அதிகம்பேர் பிரச்சினையில் சிக்குவதற்க்கு காரணம் அவர்கள் தன் துணையை ஒரு மனிதனாகவே பார்ப்பது கிடையாது. இல்லறத்தில் இருப்பவர்கள் உங்களின் துணையை ஒரு மனிதனாக தான் பார்க்கிறேன் அவர்களின் உணர்வுகளும் மதிப்பளிக்கிறேன் என்று சொன்னால் அடுத்த கட்டமாக நீங்கள் சைவத்திற்க்கு மாறி அதன் பிறகு கடவுளை எல்லாம் கும்பிடலாம். உங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பொழுது நீங்கள் எந்த கடவுளை வணங்கினாலும் சைவசாப்பாடு சாப்பிட்டாலும் உங்களுக்கு எதுவும் நடைபெறாது.
முதலில் மனிதனுக்கு செய்வோம் அடுத்தது விலங்கிற்க்கு செய்யலாம். மனிதத்தை கொன்றுவிட்டு சாமி கும்பிடுவது எல்லாம் வீணாக தான் இருக்கும்.
அடுத்ததாக எனது நண்பர் ஒருத்தர் சொல்லுவாங்க அது என்ன என்றால் சிவன் கீழ்குணம் உடையவர் பெருமாள் மோட்சத்தை கொடுப்பார் என்பார். பெருமாள் நல்ல குணம் உடையவர் போல் சொல்லுவார். சரி ஏற்றுக்கொள்வோம் அவர் நல்லவராக இருக்கட்டும்.
எத்தனையோ புத்தகத்தை நீங்கள் படித்திருக்கலாம் மனிதனுக்கு உடனே வரத்தை கொடுப்பவர் சிவனாக தான் இருந்திருக்கிறார். பெருமாள் யாருக்கும் எதனையும் அவ்வளவு எளிதில் கொடுக்கமாட்டார். மனிதனுக்கு மனம் இரங்கி கொடுப்பவன் நல்லவனா? மனிதன் கஷ்டப்பட்டு கிடக்கட்டும் என்று அனைத்தையும் சுருட்டுபவன் கடவுளா?
சிவன் அசைவம் சாப்பிடுவனாக இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள் .சிவன் மனிதன் கேட்டவுடனே வரத்தை அள்ளி கொடுக்கிறான். எனது கண்ணோட்டத்தில் பார்த்தால் சிவன் மட்டுமே கடவுளாக எனக்கு தோன்றுகிறான். பெருமாள் அப்படி ஏதும் செய்பவனாக தோன்றவில்லை. பெருமாளிடம் எப்படி நல்லகுணம் இருக்கும்.
என்னிடம் வருகின்றீர்கள் ஏதோ ஒன்றை கேட்கிறீர்கள் நான் உங்களுக்கு முடிந்த உதவியை செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் என்ன சொல்லுவீர்கள். பரவாயில்லை ஏதோ கலிகாலத்தில் நமக்கு இப்படிப்பட்ட உதவி கூட கிடைக்கிறதே என்று சொல்லுவீர்கள் அதனை விட்டுவிட்டு நீ மனிதனாக பிறந்துவிட்டாய் நீ கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும் என்று நான் தர்க்கம் பேசினால் எப்படி நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வீர்கள். அனைவருக்கும் வாரி வழங்கியவன் சிவன். வாரி வழங்குபவன் உங்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால் கெட்டவனாக இருக்கிறான். எதனையும் வாரி கொடுக்காதவன் கடவுளாக தெரிகிறான்.
பெருமாள் மோட்சத்தை மட்டும் தான் தருபவன் என்று சொல்லுகிறார்கள் இவரின் மோட்சம் யாருக்கு தேவை ? நான் பிறந்தவுடன் எனது பசிக்கு இரண்டு மார்பை படைத்து அதில் பாலை கொடுத்த இறைவன் நான் இறந்தவுடன் அடுத்த உலகத்திற்க்கு எனக்காக எதுவும் செய்யாமல் விட்டுவிடுவானா என்ன?. அன்பே சிவம் என்று தான் சொல்லியுள்ளார்கள். அன்பானவன் எப்படி கீழ்தனமானவாக இருக்கமுடியும்.
நீ எதனை உண்கிறாய் என்பது தேவையில்லை நீ எதனை வெளியில் கொடுக்கிறாய் என்பது தான் முக்கியம். அசைவம் சாப்பிட்டாலும் அன்பை பொழிப்பவன் இறைவனாக என் கண்ணிற்க்கு தெரிகிறான். சைவத்தை சாப்பிட்டுவிட்டு கடுமையை காடடுபவன் எப்படி இறைவனாக முடியும்?
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
sir,
I want to know, are u differentiate god..who is best whether sivan or perumal. Hari yum sivanum onne ithai ariyathavar vail manne which mean Hari and sivan is same thouse who doesent know in their mouth sand only)..I didnt say this but our ancestors said about this
Post a Comment