வணக்கம் நண்பர்களே!
புதனைப்பற்றி நாம் சோதிடத்தில் கவலைப்படுவதில்லை. நாம் சனிக்கிரகத்தையும் குருக்கிரகத்தையும் பார்த்து அனைத்தையும் சொல்லிக்கொண்டு வருவோம். புதனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே கிடையாது. உண்மையில் ஒரு நல்ல சோதிடர் என்றால் புதனை கணக்கில் எடுத்துக்கொண்டு சொல்லவேண்டும் அதே நேரத்தில் புதனுக்கு தகுந்த பரிகாரத்தை செய்ய சொல்லிவிடவேண்டும்.
அதிவேகமாக செல்லுகின்ற அனைத்து கிரகத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியதை செய்துவிடவேண்டும். அதில் ஒன்று தான் புதன் கிரகமும்.
புதன் கிரகம் தன்னோடு சேரும் கிரகத்திற்க்கு தகுந்தவாறு அமர்ந்த வீட்டிற்க்கு தகுந்தவாறு பலனை கொடுத்தாலும் செய்கின்ற வேலை எல்லாம் நரி தனமாக இருக்கும். நரி தனம் செய்வதால் வஞ்சத்தில் விழுவதற்க்கு அதிகவாய்ப்பு உங்களுக்கு ஏற்படும்.
இன்றைய உலகம் வஞ்சகமாக மாறிவிட்டது. யாரை நம்புவது யாரை தள்ளுவது என்பது தெரியாமல் இருக்கின்றது. புதனின் வேலையை செய்வதற்க்கு என்று நிறைய பேர் இந்த பூமியில் உருவாகிவிட்டார்கள்.அவர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் புதனுக்கு நீங்கள் பரிகாரம் செய்யவேண்டும்.
புதனைப்பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் செயலை உற்றுநோக்கினால் போதும். அவர்களின் செயல் அனைத்தும் புதனின் அம்சம் நிறைந்து காணப்படும்.
எனது குரு கூட என்னிடம் யாருக்காவது வேலை சென்றால் முதலில் அவர்களின் ஜாதகத்தை பார்த்து புதனை கட்டு என்று சொல்லுவார். புதனை கட்டிவிட்டாலே அவன் சிறக்க ஆரம்பித்துவிடுவான்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
1 comment:
NAMASKKARAM,
PUDHANUKKU ENNA PARIKARAM SEIVATHU?
Post a Comment