வணக்கம் நண்பர்களே!
கோபம் என்பது ஒரு நல்ல சக்தி அந்த சக்தியை நாம் சரியான திசையில் செலுத்தும்பொழுது மிகவும் பெரியஅளவினான நன்மையை நாம் பெறமுடியும். நாம் பல சாமியார்களை கூட பார்த்து இருக்கிறேன். அவர்களுக்கு எல்லாம் பயங்கரமான கோபத்தை வெளியில் காட்டுவார்கள். ஒரு விசயத்தில் இறங்கி செய்யும்பொழுது மிக பெரிய அளவிலான பணியை எளிதில் முடிப்பார்கள்.
ஒருவருக்கு கோபம் வருகிறது என்றால் எதிரில் இருக்கும் நபர் செய்யும் செயலை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்று அர்த்தம். கோபம் வருபவர்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது அதனை மீறி அந்த நபர் செய்யும்பொழுது கோபம் வருகிறது.எதிர்பார்ப்பு இருக்க வேண்டியது தான் ஆனால் அநத எதிர்பார்ப்பு ஒரு அளவை தாண்டி இருக்ககூடாது.
கோபம் யாருக்கு அதிகமாக வருகின்றது என்று பார்த்தால் அவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்பட்டு இருக்கும். அல்லது ராகு கேது தோஷம் ஏற்பட்டு இருக்கும் அப்படியும் இல்லை என்றால் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை மற்றும் சதயம நட்சத்திரகாரர்களாக அவர்கள் இருப்பார்கள்.
ஒரு சில நெருங்கிய வட்டாரம் என்னிடம் வந்து பையனுக்கு திருமணம் செய்யும்பொழுது அவர்கள் என்னிடம் பெண்ணின் போட்டோவை காட்டுவார்கள் அவர்களின் ஜாதகத்தை பார்க்காமலே இந்த பெண்ணிற்க்கு செவ்வாய் தோஷம் மற்றும் நான் சொன்ன தோஷம் இருக்கும். அவர்கள் ஜாதகத்தை எடுத்து பார்ப்பார்கள் நான் சொன்னது போலவே இருக்கும்.அவர்கள் கேட்பார்கள் எப்படி இப்படி சொல்லுகிறீர்கள் என்று கேட்பார்கள்.
ஒரு பெண் அழகாக இருந்தால் அந்த பெண்ணிற்க்கு மேலே சொன்ன தோஷம் கண்டிப்பாக இருக்கும்.நீங்களே திருமண தகவல் தளங்களில் தேடிப்பாருங்கள் கண்டிப்பாக நான் சொன்னது இருக்கும்.(நீங்கள் நினைப்பது புரிகிறது இவருக்கு வேலையே இல்லாமல் இது எல்லாம் செய்துக்கொண்டிருப்பார் நம்மையும் பார்க்கசொல்லுவார்) சோதிடன் என்று சொன்னால் அனைத்தையும் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.
அழகானவர்களுக்கே ஆபத்து என்பது வரும் எனபது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பொதுவாக அழகானவர்கள் நன்றாக வாழ்வதில்லை அந்த காரணத்தால் மட்டுமே சொல்லுகிறேன். அழகாக இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு ஏக்கம் என்பது இருந்துக்கொண்டே இருக்கும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு பிரச்சினையே இது போல் தான் வரும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை என்பது இருக்காது. அடிக்கடி முகத்தை காட்டிக்கொள்வார்கள்.
என்னிடம் நிறைய பேர் குழந்தைகள் எல்லாம் பெற்றுக்கூட எனக்கும் எங்க வீட்டுக்காரர்க்கும் பொருத்தும் இருக்கிறதா என்று பார்த்துச்சொல்லுங்கள் என்று சொல்லுவார்கள். எப்ப வந்து பொருத்தம் பார்க்கிறீர்கள் என்று கேட்பேன். இரண்டு பேருக்கும் அண்டர்ஸ்டான்டிங் இல்லை என்பார்கள்.
படம் முடிந்துவிட்டது மறுபடியும் முதல் ரீலில் இருந்து போடுங்கள் என்று சொன்னால் எப்படி? அடுத்த ஜென்மத்தில் மட்டுமே போடமுடியும்.
சொல்ல வந்த மேட்டரை சொல்லிவிடுகிறேன். திருமணம் செய்துவிட்டால் இருக்கின்றதோ இல்லையோ இருவரும் மகிழ்வோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள். ஒரு நாளும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருக்காதீர்கள். கோபமாக முகத்தை வைத்துக்கொள்ளாதீர்கள். விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
என்னை தேடி வரும் பெண்கள் சொல்லும் வார்த்தை அவர் முகத்தை காட்டுகிறார்.( பிடிக்காத போல் காட்டுகிறார் என்று அர்த்தம்) என்று சொல்லுகிறார்கள். அப்படி ஏதும் காட்டாதீர்கள். நீங்கள் செய்யும் செயல் அல்ல. முன்ஜென்மத்தில் செய்த தவறுக்கு இந்த ஜென்மத்தில் கிரகங்கள் உங்களை ஆட்டிவைக்கிறது அதனால் நீங்கள் செய்கிறீர்கள் என்று புரிநதுக்கொண்டு செயல்படுங்கள்.
பிரம்மன் விதியை எழுதும்பொழுது இடது கையால் எழுதிவிட்டார் என்று நினைத்துவிட்டு ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருங்கள். கோபத்தை படிப்படியாக குறைத்துக்கொள்ளுவது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
This message you told anger is good power
How is possible?
Thanks
Antony
Post a Comment