Followers

Thursday, January 2, 2014

ஆன்மீக பயணங்கள்


வணக்கம் நண்பர்களே!
ஒரு மனிதன் வருடத்திற்க்கு ஒரு முறையாவது அவனின் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வெளியிடங்களுக்கு சென்று வரவேண்டும். அப்பொழுது வாழும் வாழ்க்கையில் அவன் மகிழ்வோடு வாழமுடியும்.

ஆன்மீகவழியில் பார்த்தால் ஒரே இடத்தில் இருந்துவிட்டால் அந்த வாழ்க்கையிலேயே ஒரு பற்று வந்துவிடும். பற்று வந்துவிட்டால் உங்களுக்கு கர்மம் வந்துவிடும். என் வீடு என் குடும்பம் என்று வாழஆரம்பித்துவிடுவீர்கள் அப்புறம் மரணம் என்பது உங்களுக்கு பயமுறுத்தும் ஒரு விசயமாக இருக்கும். விடைபெறமுடியாத ஒரு நிலை ஏற்படும். 

வெளியிடங்களுக்கு சென்று வரும்பொழுது உங்களின் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். நீங்கள் எத்தனையோ மகான்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள் அவர்கள் எல்லாம் ஒரு இடத்தில் இல்லாமல் அனைத்து இடங்களும் சென்று வருவார்கள். கடவுள் தன்னுள் இருக்கிறார் என்று சொல்லும் மகான்கள் கூட வெளியிடங்களை சுற்றி பாரக்கிறார்கள். மனித வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் மாதிரி ஆட்கள் வெளியிடங்களுக்கு சென்று வருவதில்லை. ஒரே இடத்தைபிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறோம்.

இனிமேல் நீங்கள் வருடத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு விடுப்பு கிடைக்கும்பொழுது அனைத்து இடங்களையும் சுற்றி பாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

என்ன தவம் செய்தனை.......நண்பரே, இது எனக்கு கிடைத்த பெரும் விருது போல உள்ளது. பல மாதங்களாக எழுதி வந்தாலும், இப்படி நீங்கள் எனது பயணத்தை ஆன்மீகத்தோடு தொடர்ப்பு படுத்தி சொல்லியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதை படித்த பின்பு ஆனந்தத்தில் கண்ணீர் வருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. இன்னும் நிறைய பொறுப்பு கூடி உள்ளது போல ஒரு உணர்வு. மனதிலிருந்து மிக்க நன்றி நண்பரே !