Followers

Sunday, November 3, 2013

ஆன்மீக அனுபவங்கள் 129


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனைப்பற்றி ஒரு செய்தியை சொல்லுகிறேன் படியுங்கள. என்னடா அம்மன் அம்மன் என்று சொல்லுகிறார் என்று நினைக்க தோன்றும். ஒரு சிலர் எனது நிலையில் இருப்பவர்களுக்கு நான் எழுதுவது அவர்களுக்கு பொக்கிஷம்போல் தோன்றும். நான் எழுதும் ஆன்மீகத்தை வைத்தே அவர்கள் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்கு செல்லமுடியும். ஒவ்வொருவரின் புரிதலை பொருத்து அது அமையும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தெய்வம் காவல் காக்கும் அந்த எல்லையில் நாம் செல்லும்பொழுது அந்த அம்மனோ அல்லது ஏதோ ஒரு தெய்வம் நம்மிடம் அதனைப்பற்றி தெரிவிக்கும். அப்பொழுது நாம் புரிந்துக்கொள்ளலாம். இந்த தெய்வத்தின் பிடியில் இந்த ஏரியா இருக்கின்றது என்று தெரிந்துவிடும். இது எல்லாம் எதற்கு என்றால் அந்த ஏரியாவில் நாம் எதையாவது செய்ய வேண்டும் என்றால் அந்த தெய்வத்தின் உதவி நமக்கு தேவைப்படும்.

உங்களுக்கு எளிதாக புரியும்படி சொல்லுகிறேன். அடுத்த ஊரில் ஒரு வேலை உங்களுக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஊரைப்பற்றி தெரியாது அந்த ஊரில் ஒரு நண்பர் உங்களுக்கு தெரிந்து இருக்கிறார் என்றால் தெரியாத ஊரில் அவரை வைத்து வேலையை செய்தால் எளிதில் வேலை முடிந்துவிடும். அது போல் இதுவும்.

ஒரு வேடிக்கையான நிகழ்வைப்பற்றி சொல்லுகிறேன். அடுத்தஊரில் உள்ளவர் உங்களிடம் வந்து சண்டை போட்டுவிட்டு சென்றுவிட்டார். அவர்க்கு ஏதாவது நீங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள். சரி அந்த ஆளை அடித்துவிடவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அப்பொழுது அந்த ஊரில் உள்ள ஆட்களை அடியால் போல் வைத்து அடித்துவிட்டால் எப்படி இருக்கும். 

மாந்தீரிகத்தில் இப்படி செய்துவிடுவார்கள். உங்களின் ஊரில் உள்ள தெய்வத்தை வைத்தே உங்களை அடிப்பார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் அப்பொழுது மட்டுமே அடித்தவன் யார் என்று தெரியாது. எப்படி என்றால் அடிவாங்கியவன் சும்மா இருப்பான அவன் போய் யாராவது ஒரு மாந்தீரிகனிடம் போய் பார்ப்பான். அந்த மாந்தீரிகர் பார்க்கும்பொழுது அடித்தது அந்த ஊரில் இருக்கும் தெய்வமே அடித்திருக்கிறது என்று காட்டும். நம்ம ஊர்க்காரனே உன்னை அடித்திருக்கிறான் என்று சொல்லிவிடுவார்.

தலையை பித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவான். யாருடா அந்த ஆள்?

தொடரும்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: