Followers

Sunday, November 3, 2013

குலதெய்வம் கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் குலதெய்வத்தைப்பற்றி கேட்டதற்க்கு நான் வேலைபளு காரணமாக பதில் அளிக்காமல் இருந்தேன். அவர்க்காக இந்த பதிவு.

அவர் கேட்ட கேள்வி

கிருத்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்க்கு மாறியவர் அவர். அவர் கேட்ட கேள்வி நான் எந்த குலதெய்வத்தை வணங்குவது என்று கேட்டுருந்தார். 

பதில்

இது ஒரு சிக்கலான கேள்வி தான். ஒவ்வொரு மதத்திலும் ஒரே தெய்வம் இருக்கும். அதனை எந்த பிரச்சினை இல்லாமல் வணங்கிவரலாம் ஆனால் இந்து மதத்தில் பல தெய்வங்கள் வழிபாடு இருக்கின்றது எப்படி சாத்தியப்படும் என்று கேட்க தோன்றும். முதலில் இந்த கேள்விக்கு விடை நீங்கள் இந்து மதத்தில் இணைத்துக்கொண்டால் உங்களுக்கு இந்த மதத்தில் இணைத்தவர்களே இதற்க்கு விடை சொல்லிருக்ககூடும். நீங்கள் கேட்டதால் நானும் சொல்லிவிடுகிறேன்.

ஒவ்வொரு தெய்வமும் வைத்தது ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான குணங்கள் இருக்கின்றன. அவனின் குணத்தோடு எந்த தெய்வம் ஒத்துபோகின்றதோ அந்த தெய்வத்தை வணங்கவேண்டும் என்று அந்த காலத்தில் நமது முன்னோர்கள் பிரித்து வைத்திருக்கின்றனர். 

அவர் அவர்களுக்கு பிடித்ததை வணங்கும் தெய்வம் இஷ்டதெய்வம் என்ற கணக்கில் வரும் ஆனால் குலதெய்வம் நமது குலத்தை காக்கும் தெய்வமாக ஒன்று இருக்கும் அதனை தான் நாம் வணங்கி வரவேண்டும். நீங்கள் கிருத்துவ மதத்தில் இருந்து வந்தால் நீங்கள் வசிக்கும் ஊர் எந்த ஊர் என்று பாருங்கள். அந்த ஊரில் எல்லை தெய்வம் என்று ஒன்று இருககும். அந்த எல்லை தெய்வத்தை நீங்கள் வணங்கிவாருங்கள். 

நீங்கள் கொஞ்சநாட்கள் சென்று பிறகு அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து உங்களின் சொந்த இடத்தில் ஒரு கோவிலை கட்டிவிட்டால் உங்களுக்கு பிறகு வரும் உங்களின் சந்ததினருக்கு இந்த கோவிலை உரிமையோடு வழிப்பட்டு வாருவார்கள். அவர்களுக்கும் ஒரு தனிக்கோவில் கிடைத்தது போல் ஆகிவிடும்.

ஏன் தனிக்கோவில் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகின்றேன் என்றால் ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் இது எங்களது கோவில் என்று உரிமை கொண்டாட பல பேர் வருவார்கள். அந்த கோவிலில் உங்களுக்கு இடம் கிடையாது என்றும் சொல்லகூடும் அதனால் புதிதாக கட்டிக்கொண்டால் நல்லது. உங்களால் அந்தளவுக்கு வசதியாக இல்லாவிட்டால் மண்ணை கொண்டுவந்து ஒரு சிறிய இடத்தில் வைத்து அதற்கு தீபம் போட்டு வணங்கிவாருங்கள். உங்களுக்கு பிறகு வரும் சந்ததினர் தனியாக கோவில் கட்டிக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த விசயத்தை வைத்து உங்களுக்கு சொல்லியுள்ளேன்.உங்களுக்கு இந்த பதில் சரி என்று உங்களின் மனதிற்க்கு பட்டால் செய்துவாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: