Followers

Tuesday, November 26, 2013

ஆன்மீக அனுபவங்கள் 136


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு நண்பர் என்னிடம் தொடர்புக்கொண்டு பைரவரைப்பற்றி கேட்டுருந்தார். கோவில்களில் பைரவர் பூஜை பிரபலமாக இருக்கின்றது நீங்கள் பைரவரை வணங்கவேண்டாம் என்று சொல்லியுள்ளீர்களே என்று கேட்டுருந்தார்.

கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் நீங்கள் பங்கு பெறலாம் அதனால் எந்த தொந்தரவுக்கும் உங்களுக்கு இருக்கபோவதில்லை. வீட்டில் வைத்து வணங்கும்பொழுது அதனால் பிரச்சினை வரும் என்பதால் சொல்லுகிறேன். தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள் அவர்களை வைத்து விளையாடும் ஆன்மீகவாதிகள் பொல்லாதவர்கள். 

இவர்களின் சொந்த தேவைக்கு தகுந்தார்போல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவார்கள்.மக்களை அலைகழிப்பார்கள். மக்களை இப்படி தன் இஷ்டத்திற்க்கு செய்வதே மிகப்பெரிய கர்மம் என்பதை தெரியாமல் செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஒரு காலக்கட்டத்தில் பிரதோஷம் என்றால் என்ன என்று கூட தெரியாது. இன்று ஒரு கோவில் விடாமல் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஒரு காலக்கட்டத்தில் துர்கை வழிப்பாடு பிரபலமாக இருந்தது. இன்று அது எல்லாம் காணாமல் போய்விடும் என்று நினைக்கின்றேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆன்மீகம் என்பது அட்வெர்டையிஸ்மெண்டாக (விளம்பரத்தை) சார்ந்து இருக்கின்றது. மக்களிடம் ஏதாவது ஒன்றைச்சொல்லி வழிப்பாடு செய்ய சொல்லுவது. இதில் கண்டிப்பாக ஒரு உள்நோக்கம் இருக்கும்.

மனது என்ன செய்யும் என்றால் புதுமையை விரும்பும். அது இயற்கையாகவோ அப்படி தான் இருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் வேஷ்டி கட்டிக்கொண்டு இருந்தார்கள் அப்புறம் பேண்ட் சர்ட் வந்தது. இன்று அதில் பல வெரையைட்டியை விரும்புகிறது அல்லவா. இட்லி, வடை ,பஜ்ஜி சாப்பிட்டு இருந்தவனுக்கு பாணிபூரி பேல்பூரி மேல் ஆர்வம் வருவது எல்லாம் இப்படி மனம் புதுமையை விரும்புவதால் மட்டுமே.  தெருவுக்கு தெரு வடை பஜ்ஜி கடையில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் இன்று பாணிபூரி கடையில் நிற்கிறார்கள். 

குலதெய்வத்தை வணங்கிக்கொண்டு இருந்தவனுக்கு முருகன் கண்ணுக்கு தெரிந்தான். மாலை போட்டு வணங்க ஆரம்பித்தான். முருகனுக்கு மாலை போட்டவன் அப்படியே கேரளாவையும் பார்க்கலாம் என்று சபரி மலை ஐயப்பனுக்கு மாலை போட்டான் இது எல்லாம் புதுமை மட்டுமே. நல்லது நடந்தால் சரி. பழனிக்கு செல்ல ஆயிரம் ரூபாய் செலவாகும் கேரளா செல்ல ஐந்தாயிரம் செலவாகும். கையில் இருந்து பணம் தான் செல்லுகின்றதே தவிர ஒரு பிரச்சினையும் தீராது.

ஆன்மீகவாதிகள் சரியான ஒரு டெக்னிக்கை கையில் எடுத்தார்கள். அற்புத சுகமளிக்கும் கூட்டத்தை அடிக்க என்ன டா வழி என்று யோசித்தார்கள். இந்தியாவே கடனில் இருக்கின்றது மக்களும் கடனில் இருக்கின்றார்கள். அடிடா அங்கு என்று பைரவரை கும்பிட்டால் கடன் போய்விடும் என்றார்கள். மக்கள் இருக்கும் கடனில் விழி பிதுங்கி நிற்கிறார்கள். என்னடா வழி என்று பார்த்தார்கள் பைரவரை பிடித்துக்கொண்டார்கள். ஆனா கடன் அதிகமாக போக போகிறது என்பது மட்டும் உண்மை.

இந்து மதத்தின் ஆணிவேர் கர்மம். அதனை நீ தொலைக்க இப்படி செய்யமுடியாது. செல்லும் பாதையும் தவறு செல்லும் வழியும் தவறு. கர்மத்தை தொலைக்க உன் குலதெய்வம் மனசு வைக்கவேண்டும். உன் முன்னோர்கள் மனசு வைத்தால் மட்டுமே உண்டு.

திருப்பூர் மற்றும் வெள்ளக்கோவில் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.  28/11/2013 வியாழக்கிழமை அன்று என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

எல்லாமே கர்மா என்றால் நாம் இந்த ஜென்மத்தில் செய்யும் நல்ல காரியங்கள்
என்று பலனைத் தரும் ? அடுத்த ஜென்மத்திலா ? பசிக்கும் போது சரியான சமயத்தில் கிடைக்காத உணவு வீணே . போன ஜென்மத்தில் நாம் வேறு யாரோ .. இப்போது வேறு யாரோ ?
தப்பு செய்யும் போது உடனே தண்டனை கிடைத்தால் தான் மக்களுக்கு பயமும்
கடவுளின் மீது நம்பிக்கையும் வரும் . சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வேறு ஜென்மத்தில்
அதன் பலனைத் தரும் போது அவன் தெய்வத்தை நொந்து கொள்வதைத் தவிர
வேறு என்ன செய்வான் ? காலையில் தவறு செய்பவனுக்கு மாலையிலேயே தண்டனை கிடைப்பது தான் சரியான தர்மம்.
எனக்கு கர்மாவின் படி தான் இந்த ஜென்மம் நடைபெறுகிறது என்பதை ஒப்புக் கொண்டாலும் அது இவ்வளவு தாமதமாக பலன் அளிப்பதை கடுமையாக எதிர்க்கிறேன்.
கர்மா தியரியை வெறுக்கிறேன். ஒப்புக் கொள்ள முடியவில்லை.