Followers

Friday, November 22, 2013

மனதால் செய்யும் பாவமே கர்மம்


வணக்கம் நண்பர்களே!
                     உடலால் செய்யும் பாவங்களை விட மனதால் செய்யும் பாவங்கள் தான் அதிகமாக மனிதனின் கர்மா கணக்கில் சேருகின்றது. மனதால் பிறர்க்கு துன்பம் செய்யும் பொழுது அதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் ஆனால் அது மிகப்பெரிய விசயமாக கர்மா கணக்கில் சேருகின்றது. மனதில் செய்யும் பிரச்சினைக்காக என்னவோ சந்திரனை வைத்து ஏழரை சனி மற்றும் அஷ்டமசனி நம்மை பெரிதும் பாதிக்கிறது.

மனதால் நாம் செய்யும் பாவம். மனதாலே நம்மை தாக்கவேண்டும் என்று தான் சந்திரன் மற்றும் சனியை வைத்து கோச்சாரபலனை கண்டுபிடித்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். 

நாம் செய்த பாவம் நம்மை எந்த உருவத்தில் வந்து தாக்கும் என்றால் மனதாலே தாக்கும். நமக்கு உதவி செய்வதற்க்கு பல வழிகளில் வருவார்கள். நம்மை அழிப்பதற்க்கு நமது மனதே போதும். மனது தான் நம்மை கொல்லும்.

இன்றைய காலகட்டத்தில் உடலாலேயே பல பேரை ஏமாற்றிவிடுகிறார்கள் நீங்கள் மனதால் ஏமாற்றப்படுவதற்க்கு சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று நினைக்கதோன்றும். அந்த காலத்தில் சொல்லுவார்கள் நீ தவறு செய்தால் உன் பிள்ளை தாக்கும். அதனால் நீ தவறு செய்யாதே என்று சொல்லுவார்கள். இன்றைய காலகட்டத்தில் அவன் அவன் செய்த வினை அவனேயே அந்த பிறவியிலே வந்து தாக்குகிறது.

காதலில் மட்டுமே அதிகமாக மனதை ஏமாற்றுகிறார்கள். இது எல்லாம் ஒன்று இல்லை என்று நாகரீகமாக சொல்லிக்கொண்டு சென்றாலும் அதே மனது பின்பு ஒரு காலத்தில் நம்மை பலிவாங்க காத்துக்கொண்டு இருக்கின்றது. தக்கசமயத்தில் அது பலிவாங்குகிறது.அவர் அவர்களின் மனதே அவர்களை கொல்லுகிறது.

மனதாலும் உடலாலும் எந்த ஒரு தீங்கையும் பிறர்க்கு இழைக்காதீர்கள். அது உங்களின் கர்மகணக்கில் அதிகமாக ஏறிவிடும். பாவத்தை தீர்க்க வந்த நாம் பாவத்தை ஏன் தேவையில்லாமல் ஏற்றிக்கொள்ளவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: